பக்கம்:பிறந்த மண்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - iši

விருட்டென்று திரும்பிச் சென்று விட்டாள் பூர்ணா. அவன் ஏதோ பதில் சொல்வதற்காக வாயைத் திறந்தான். ஆனால், கேட்பதற்கு அவள் அங்கே நின்றுகொண்டிருக்க வில்லை. அவளுடனே வந்திருந்த மற்றொரு பெண் மட்டும் போகிற போக்கில் அவர்கள் இருவரையும் ஒரு தடவை திரும்பிப் பார்த்துவிட்டுப் போனாள். .

“உங்களைப் புத்தர்பெருமான்த்ான் காப்பாற்றினார். நல்லவேளை! வந்துதானாக வேண்டுமென்று பிடிவாதம் பிடிக்காமல் என்னோடு விட்டுவிட்டுப் போய்விட்டாள்!”. பூர்ணாவின் தலை மறைந்ததும் சபாரத்தினம் சிரித்துக் கொண்டே அழகியநம்பியிடம் கூறினார்.

திடீரென்று பூர்ணாவை அங்கே சந்தித்த பதற்றமும், பரபரப்பும் அடங்குவதற்கு அழகியநம்பிக்குச் சில விநாடிகள் ஆயின. ஆழ்ந்த நல்ல - சுகமான தூக்கத்தில் கெட்ட சொப்பனம் ஒன்று க்ண்டு விழித்துக்கொண்டது போன் றிருந்தது அவன் நிலை -

கபாரத்தினமும் அவனும் கழனியாவிலிருந்து புறப்படும் போது இருட்டத் தொடங்கிவிட்டது. நீலநிறக் கண்ணாடிக் குழாய்க்குள்ளே போட்ட வெண்ணிற இரசகுண்டுபோல் சுற்றுப்புறம் ஒளி மங்கி இருண்டுகொண்டு வந்தது. கழனியா வின் பெளத்த ஸ்தூபியிலும் ஆலயத்தின் பிற்பகுதிகளிலும் பெரிய பெரிய ஒளி அரும்புகள் குபிர் குபிரென்று வெடித்துப் பூத்தாற்போல மின்சார விளக்குகள் பலவண்ணங் காட்டி எரிந்தன. ஆண்களும், பெண்களுமாக ஆலயத்துக்குள் போவோர்-வருவோர் கூட்டிம் அதிகரித்திருந்தது. அந்தச் சமயத்தில் ரோட்டுக்கு வந்து நகரத்துக்குள் செல்வதற் 'காகப் பஸ் ஏறினர் சபாரத்தினமும், அழகியநம்பியும்.

'நீங்கள் இன்றைக்கு இப்படியே என்னோடு எங்கள் விட்டிற்கு வந்தால் என்ன? இரவுச் சாப்பாட்டை எங்கள் விட்டில் வைத்துக்கொள்வோம். அங்கேயே படுத்திருந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/153&oldid=597537" இலிருந்து மீள்விக்கப்பட்டது