பக்கம்:பிறந்த மண்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 பிறந்த மண்

விட்டுக் காலையில் இருவரும் சேர்ந்தே ஒன்ற்ாகக் கடைக்குத் கிளம்பலாமே?” என்றார் சபாரத்தினம்

'இல்லை! நான் இன்றிரவு கடைக்கே போய்விடு கிறேன். பிரமநாயகம்கூட ஊரில் இல்லை. ஏதோ வியாபார விஷயமாகக் கண்டிக்குப் புறப்பட்டுப் போயிருக்கிறார்”. என்று அவருக்குப் பதில் கூறினான் அழகிய நம்பி. .

'கழனியாவில் அவளைச் சந்தித்ததிலிருந்தே உங்கள் மனம் சரியாயில்லை போலிருக்கிறது. ஏன் இப்படிச் சோர்ந்து போயிருக்கிறீர்கள்? உங்கள் குரல் கேட்பதற்கு என்னவோ போலிருக்கிறதே. நீங்கள் முன்கூட்டியே தெரிந்துவைத்துக் கொண்டிருப்பது நல்லதென்றுதான் சில விவரங்களை உங்க வரிடம் தெரிவித்தேன். அவற்றை நினைத்துச் சத்ா வீண் மனக் கலவரமடையாதீர்கள்.”

சபாரத்தினம் இப்படிக் கூறியபோது, 'தன்னுடைய அப்போதைய மன நிலையை அவரால் அவ்வளவு விரைவில் எப்படிக் கண்டுபிடிக்க முடிந்தது?’ என்றெண்ணி வியந்தான் அழகியநம்பி . .

'சபாரத்தினம்! நீங்கள் கெட்டிக்கார மனிதர்! ஒரே ஒரு விநாடிக்குள் என் மனத்தில் இருப்பதை அப்படியே கண்டு பிடித்துச் சொல்லிவிட்டீர்களே? நீங்கள் அனுமா னித்துச் சொன்னது சரிதான். இப்போது என் மனநிலை சரியில்லை. நிம்மதியற்றுக் குழப்பமடைந்திருக்கிறது. இன்று இரவு எனக்குச் சாப்பாடுகூட் வேண்டியதில்லை. ஆனால் சில மணி நேரச் சிந்தனைக்கு அவகாசம் வேண்டும். தனிமை வேண்டும். இல்லாவிட்டால் பைத்தியம் பிடித்தாலும் பிடித்து விடும். அவ்வளவு குழப்பமடைந்திருக்கிறது என் மனம்.” : - - -

இதைக் கேட்டுப் பதில் கூறாமல் சிரித்தார் சபாரத் தினம். சிரித்துக்கொண்டே தம்முடைய சட்டைப் பைக்குள் கையை விட்டு டைரி போன்ற ஒரு சிறிய கையடக்கமான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/154&oldid=597539" இலிருந்து மீள்விக்கப்பட்டது