பக்கம்:பிறந்த மண்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 பிறந்த மண்

கடைக்குப் போவதாயிருந்தால் இதே பஸ்ஸில் ಆನ್ಲ! நாம், ஏறினோமே அந்த ஸ்டாப்பில் இறங்குங்கள்" என்று சபாரத்தினம் கூறிக்கொண்டிருக்கும்போதே ஆவர். ಥಿತ್ತ வேண்டிய இடம் வந்து விட்டது. “நான் ಹಣ-ಹಚ ப்ோய்க் கொள்கிறேன். இன்னொரு நாள் கட்டாயம் உங்களுடைய வீட்டுக்கு வருவேன். இப்போது Tr೯್ಲಿ மன்னித்து விடுங்கள்..." என்று கொஞ்சும் குரலில் சபாரத்தினத்திடம் வேண்டினான் அழகியநம்பி.

"பரவாயில்லை! உங்கள் விருப்பம்போல் செய்யுங்கள். நான் விடைபெற்றுக் கொள்கிறேன். நாம் மறுபடி நாளைக் குச்சந்திக்கலாம்’-என்று சொல்லிவிட்டுச் சபாரத்தினம் இற்ங்கினார் i

அவரை அங்கே இறக்கிவிட்டுப் பஸ் மேலே நகர்ந்தது. வலிமையும், அன்பும் செறிந்த அசைக்கமுடியாத துணை ஒன்று அந்த இடத்தில் தன்னை விட்டுப் பிரிந்து கீழே இறங்கி விட்டதுபோல் ஓர் உணர்ச்சி அவனுக்கு உண்டாயிற்று. .'

ஊருக்குப் புதியவனாகையினால் இருட்டில் தான் இறங்கவேண்டிய இடத்தை த் தவறவிட்டு விடக்கூடாதே என்பதற்காகப் பஸ்ஸிற்கு வெளியே தெருவை அடையாளம் பார்த்துக் கொண்டே வந்தான் அவன். அந்த பஸ் ஸ்டாப் பிற்கு இரண்டொரு முறை கடையிலிருந்து வந்துபோய் பழகியிருந்தாலும் இருளில் பலதிற மின்சார் விளக்கொளி வில் நகரமே ஒவ்வொரு மூலையிலும்-ஒவ்வோர் இடத் திலும்-முற்றிலும் புதிதாக மாறியிருப்பது போல் தோன்றியது. கண்கள் அளவுக்கு மீறின ஒளியாலும், செவிகள் அளவுக்கு மீறின. ஒலியாலும் கூசின. இன்னும்

காட்கள் ஆனால் வழிகளும், இடங்களும் தெளிவாகப் பழக்கமாகிவிடும் .

அழகியநம்பி பஸ் ஸ்டாப்பை அடையாளம் கண்டு பிடித்து இறங்கிவிட்டான். அங்கிருந்து கடைக்குப் போகச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/156&oldid=597544" இலிருந்து மீள்விக்கப்பட்டது