பக்கம்:பிறந்த மண்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 பிறந்த மண்

கோபித்துக் கொள்வாரோ என அஞ்சினான். அப்போது அவன் மனம் இருந்த நிலையில் அன்றவிளக்கைக் கூடப் போட்டுக் கொள்ளத் தோன்றவில்லை அவனுக்கு. இருட்டி லேயே படுக்கையை விரித்துக்கொண்டு அதன்மேல் சாய்ந் தான். தலை ஒரேயடியாகக்கனத்தது. உள்ளே சமையலறை யில் பிரமநாயகமும் சோமுவும் பேசிக் கொண்ட பேச்சு அறைக்குள் படுத்துக் கொண்டிருந்த அவனுக்குத் தெளி வாகக் கேட்டது -

ஏண்டா சோமு இந்தப் பையன் அழகியநம்பியை எங்கே இன்னும் காணவில்லை?”

"எங்கே போனாரென்று எனக்குத் தெரியாது முதலாளி! நீங்கள் கண்டிக்குப் போவதாக வெளியில், கிளம்பிப்போன சிறிது நேரத்திற்கெல்லாம் இங்கே: வந்தார். பலகாரம்-காபி-கொடுத்தேன். சாப்பிட்டுவிட்டு' இந்த யாழ்ப்பாணத்துப் பிள்ளையாண்டான் சபாரத்தினம் இருக்கிறாரே அவரோடு ஏதோ பேசிக்கொண்டு நின்றார். பிறகு இரண்டு பேருமாக எங்கோ வெளியே போனார்கள். போகும்போது என்னிடம் சொல்லிக் கொள்ளவில்லை."

போகும்போது எத்தனை மணி இருக்கும்?" “ஐந்தரை மணிக்கு மேல் இருக்கலாம் முதலாளி'

அறைக்குள்ளே இருட்டில் கண்களை மூடிக்கொண்டு உறங்காமல் படுத்துக் கிடந்த அழகிய நம்பி இந்த உரை யாடலை முழுதும் கேட்டான் - -

பிரமநாயகம் சாப்பிட்டுக் கைகழுவினார். சமையற் காரச் சோமு பின்புறம் கடைக்குள்ளே போய் அவருக்கு வெற்றிலை பாக்கு வாங்கிக் கொண்டுவந்து கொடுத்தான். அதை வாங்கிக்கொண்டு கடைக்குள் போவதற்காகத் திரும்பி நகர்ந்தவர் அழகியநம்பியின் அறைக் கதவு" திறத்திருப்பதைப் பார்த்துவிட்டார், - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/158&oldid=597549" இலிருந்து மீள்விக்கப்பட்டது