பக்கம்:பிறந்த மண்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 151

உடனே, ஏண்டா! சோமு! அந்தப் பையன் வெளியிலே போகும்போது அறைக்க்தவைப் பூட்டிக்கொள்ளாமலா போனான்? இப்படிக் கேள்வி முறையில்லாமல் திறந்து கிடக் கிறதே? நீயாவது பார்த்துப் பூட்டியிருக்கக் கூடாதோ?என்று சோமுவ்ைக் கூப்பிட்டு இரைந்தார்.

'இல்லையே முதலாளி அவர் போகும்போது நன்றாகப் பூட்டிக்கொண்டுதான் போனார். நான் பார்த்தேனே!'என்று பதில் சொல்லிக் கொண்டே சமையலறைக்குள்ளே யிருந்து சோமு வந்தான். வெளியே இவ்வளவு கூத்தும் நடந்தப்ோது அழகியநம்பி சும்மா கண்களை மூடிக்கொண்டு தான் படுத்திருந்த்ான்.

“பூட்டிவிட்டுப் போயிருந்தால் அவனைத் தவிர வேறு. யார் வந்து திறந்திருக்க முடியும்? எங்கே, விளக்கைப் போட்டு உள்ளே போய்ப்பார்!” - என்று பிரமநாயகம் சோமுவுக்கு உத்தரவிட்டார். தானே எழுந்திருந்து விளக்கைப்போட்டுத் தான் வெளியில் போய்த் திரும்பிவந்த, விவரத்தைப் பிரமநாயகத்திடம் சொல்லிவிட்டால் Tణిrణాళీ என்று அழகியநம்பிக்குத் தோன்றியது. ஒரு விநாடி அப்ப்டியே செய்து விடலாமென்று எழுந்திருக்கக்கூட முற்பட்டுவிட்டான். பிரமநாயகத்தின் முகத்தில் விழிக்க வேண்டுமே! அவர் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டுமே?-என்ற புயமும் மலைப்பும் எழுந்தபோது தன் எண்ணத்தைக் கைவிட்டான். பேசாமல் தூங்குவது போல் கண்களை மூடிக்கொண்டு அப்படியே படுத்திருந்தான்.

சமையல்காரச் சோமு உள்ளே நுழைந்து விளக்கைப் போட்டான். பிரமநாயகம் அவனைத் தொடர்ந்து அறைக், குள் வந்தார். "அடடே! எப்போது வந்து படுத்துக், கொண்டார்? எனக்குத் தெரியாதே?". என்று உள்ளே படுத்துக் கொண்டிருந்த அழகியநம்பியைப் பார்த்து வியப்

புடன் பிரமநாயகத்திடம் கூறினான் சோமு. ‘. . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/159&oldid=597551" இலிருந்து மீள்விக்கப்பட்டது