பக்கம்:பிறந்த மண்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 பிறந்த மண்

கண் இமைகள் கனத்தன. கை, கால்களைச் சித்திரவதை செய்வது போலிருந்தது.

எத்தனையோ சிந்தனைகள் எத்தனையோ குழப்பு மான எண்ணங்கள், சபாரத்தினத்தைச் சந்தித்ததிலிருந்து நடந்த நிகழ்ச்சிகள்-ஒவ்வொன்றாக வரிசையாக அவன் மனத்தில் சினிமாப்படம் போல ஓடின. மூன்று மணி வரை அவனைத் துரங்கவிடாமல் துன்புறுத்திய பொறுப்பு, மனத் தையும் எண்ணங்களையும் சேரும்.

மணி மூன்றடித்தபின் அவனுடையகண்கள் அயர்ந்தன. அவனையறியாமலே தூக்கத்தின் இனிய கைகள் அவனைத் தழுவின. விடிகாலை நேரத்தின் குளிர்ந்த காற்று அறைக் குள் புகுந்து வீசியது. அழகியநம்பி போர்வையை இழுத்து விட்டுக்கொண்டான் -

அலுப்பிலும், சோர்விலும், துவண்டு போயிருந்த உடல் நல்ல இனிய தூக்கத்தில் சிக்கி நினைவிழந்தது

r ஃ 3% *

நடுத்தெருவில் இரவு ஒரு மணிக்கு அவன் தலை தெறிக்க ஒடுகிறான்! இரண்டு முரட்டு சிங்கள ஆட்கள், கையில் பளபளவென்று மின்னும் பிச்சுவாக் கத்தியோடு அவனைத் துரத்திக் கொண்டு ஓடிவருகிறார்கள். அவர் களுடைய குரூரமான கண்களில் கொலைவெறி மின்னு கிறது - . .

'பூர்ணாவுக்கு எதிரியாகவா வந்து முளைத்திருக் கிறாய்? இரு உன்னைத் தீர்த்துக் கட்டிவிடுகிறோம்"என்று கூச்சலிட்டுக் கொண்ட்ே கத்தியை ஓங்கிக் கொண்டு பாய்ந்து வருகிறார்கள் அந்த முரடர்கள்.

எதிரே ஒரு பெரிய மாடிவிட்டின் பால்கனியில் நின்று கொண்டு அந்தக் காட்சியைக் கண்டு இராட்சசி போல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/162&oldid=597558" இலிருந்து மீள்விக்கப்பட்டது