பக்கம்:பிறந்த மண்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 - - - பிறந்த மண்

'தம்பி! தம்பி இதென்ன சொப்பனமா?"-யாரோ தட்டி எழுப்பினார்கள். அறைக்குள் விளக்கு எரிந்தது. அழகிய நம்பி வாரிச் சுருட்டிக் கொண்டு படுக்கையிலிருந்து எழுந்திருந்தான். கண்களைக் கசக்கிவிட்டுக் கொண்டு பார்த்தான். சமையற்காரச் சோமு படுக்கைக்குப் பக்கத் தில் நின்றுகொண்டிருந்தான். அறைவாசலில் பிரமநாயகம் பிரஷ்ஷில் பல் தேய்ப்பதற்காகப் பசையை ஊற்றிக்கொண் டிருந்தார். விடிவதற்கு இன்னும் சிறிதுநேரமே இருக்கும் என்று தோன்றியது. கடிகாரத்தின் பக்கம் திரும்பிப் பார்த் தான், மணி ஐந்தரை ஆகியிருந்தது

என்ன தம்பி? சொப்பனம் கண்டீர்களா? எவ்வளவு பெரிதாக அலறிவிட்டீர்கள்? என்னமோ ஏதோ என்று பயந்து நடுங்கிப்போய் ஓடிவந்தேன்’ என்றான் சோமு. அழகியநம்பிக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. பச்சைக் குழந்தை பார்! அதனால்தான் சொப்பனத்தில் வாய் உளறு. கிறது. இவன் போட்ட"கூச்ச்லைக் கேட்டுவிட்டுத் தெருவில் போய்க் கொண்டிருந்த ரோந்து போலீஸ்காரன் எவனாவது கடைக்குள் கொலையோ, கொள்ளையோ என்று ஒடிவராம லிருக்க வேண்டுமே என்று எனக்குப் பயமாகப் போய் விட்டது' பிரமநாயகம் கேலியாக இப்படிச் சொன்னார். தான் கண்ட கனவை அவ்வப்போது நினைத்தாலும் அழகியநம்பிக்கு மயிர்க்கால்கள் சிலிர்த்து நின்றன. ஒட்டம் நின்று இரத்தம் உடலில் அங்கங்கே உறைந்துவிடும் போலிருந்தது

அப்பப்பா என்ன பயங்கரமான கனவு?-அழகியநம்பி படுக்கையைச் சுருட்டி வைத்துவிட்டு எழுந்திருந்தான். பிரம நாயகம் ப்ல் விளக்குவதற்காகக் குழாயடிக்குப் போனார்.

அழகியநம்பி சோமுவுக்குப் பக்கத்தில் சென்று, முத லாளி கண்டிக்குப் போவதாக நேற்றுச் சாயங்காலம் என் னிடம் கூறினாரே ஏன் போகவில்லை?" என்று காதருகில் மெல்லக் கேட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/164&oldid=597563" இலிருந்து மீள்விக்கப்பட்டது