பக்கம்:பிறந்த மண்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீா. பார்த்தசாரதி 163

"ஐயா யாரைப் பார்ப்பதற்காகப்போகவேண்டுமென்று இருந்தார்களோ, அவர் நாளைக் காலையில் புறப்பட்டு

இங்க்ேயே வருவதாகத் தந்தி கொடுத்துவிட்டாராம்’

என்றான் ச்ோமு.

சோமு தூக்கத்தில் இரைந்து உளறிவிட்டேனா?” அசடுவழியச் சிரித்துக்கொண்டே மெதுவான குரலில் அழகியநம்பி கேட்டான். ‘உளறலா? அதையேன் கேட் கிறீர்கள்? நாலரை மணியிலிருந்து ஐந்தரை மணிக்குள் இரண்டு மூன்று தடவை அலறிவிட்டீர்கள் நானும் முதலாளியும் இல்லாததெல்லாம் நினைத்துப் பயந்து போய் விட்டோம்” என்றான் சோமு

முதல்நாள் சாயங்காலம் தான் வெளியில் கென்று சபா ரத்தினத்தோடு சுற்றிவிட்டுத் திரும்பியது பற்றிப் பிரம

நாயகம் தன்னிடம் நேரில் ஏதாவது தேட்பார் என்று அவன்

எதிர்பார்த்தான். ஆனால், அதுபற்றி அவர் அவனிடம் ஒன்றுமே கேட்கவில்லை. .م . ,

குளித்துச் சாப்பிட்டு அலுவலகச் சாவியை எடுத்துக் கொண்டு அவன் புறப்பட்டபோது மணி ஒன்பதரை. அதற் கிடையில் நான்கு மணி நேரத்தில் முக்கியமான நிகழ்ச்சி ஒன்றும் நடைபெறவில்லை. அந்தச் சாவியை எடுத்துக் கொண்டு கடைக்குள் அவன் புறப்பட்டபோது பிரமநாயகம் அவனைத் தனியாக ஒரு மூலைக்கு அழைத்துக் கொண்டு

போய், "இதோ பார்! உன்னிடம் ஒரு செய்தி சொல்ல, வேண்டுமென்று நேற்றே நினைத்துக் கொண்டிருந்தேன்.

சொல்ல மறந்து விட்டது. பூர்ணா கூப்பிட்டாள் என்று அவள் வீட்டிற்கோ, வேறெங்காவதோ அவளோடு நீ போக வேண்டாம். சினிமாவுக்கு, கடற்கரைக்கு, விருந்துக்கு அங்கே-இங்கே என்று எதற்காவது கூப்பிட்டுக்கொண்டே இருப்பாள். நீ போகக்கூடாது, போனால் உன்க்குத்தான் ஆபத்து. கத்தி துனியில் நடப்பதைப் போல எண்ணிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/165&oldid=597566" இலிருந்து மீள்விக்கப்பட்டது