பக்கம்:பிறந்த மண்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 பிறந்த மண்

வந்திருந்த சொந்தக் கடிதங்களை ஓர் ஆள் மூலம் பின்கட்டில் அவரிடம் கொண்டுபோய்க் கொடுக்கும்படி அனுப்பிவிட்டான். மற்றவற்றில் வியாபார சம்பந்தமாகக் கடைக்கு வந்திருந்த பொதுக்கடிதங்களைத் தவிர அழகிய நம்பியின் பெயருக்கு நான்கு கடிதங்கள் வந்திருந்தன. அவற்றைத் தனியே பிரித்தெடுத்துத் தன் சட்டைப் பையில் வைத்துக்கொண்டு எஞ்சிய கடிதங்கள்ைப் பூர்ணாவின் மேசைமேலே கொண்டுபோய் வைத்தான்

பின்பு தன் இடத்தில் வந்து உட்கார்ந்துகொண்டு தனக்கு வந்த கடிதங்களை ஆவலோடு ஒவ்வொன்றாகப் பிரித்துப் படிக்கத் தொட்ங்கினான்.

முதல் கடிதம் அவன் தாய் ஊரிலிருந்து எழுதியிருந் தாள். தாய்க்கு எழுதத் தெரியாது. அவள் சொல்லக் கேட்டு வள்ளியம்மை எழுதியிருப்பாள் என்று அவன் புரிந்து கொண்டான்.

அவன் கொழும்பு போய்ச் சேர்ந்ததும் எழுதிய கடிதம் கிடைத்ததென்றும், தென்காசியிலிருந்து முருகேசன் கடிதம் எழுதியிருந்தானென்றும் தொடங்கி பன்னீர்ச்செல்வம் வட்டிப்பணம் தரச்சொல்லி மிரட்டியதையும், காந்திமதி ஆச்சியின் உதவியால் வட்டிப்பணம் கொடுத்து வரவுவைத்து விட்ட்தையும், விவரித்திருந்தாள். வீட்டு நிலைமை மிகவும் கஷ்டமாக இருக்கிறது. விரைவில் நீ ஏதாவது கொஞ்சம் பணம் அனுப்பினால்தான் நல்லது. இதெல்லாம் நான் எழுதித்தான் உனக்குத் தெரியவேண்டுமென்பதில்லை. நீ குடும்பக் கஷ்டம் தெரிந்த பிள்ளை. உன் தந்தை ஆயிரக் கணக்கில் கடன் வைத்துவிட்டுப் போயிருக்கிறார். அவ்வள வையும் நீ தலையெடுத்துத்தான் அடைக்கவேண்டும். கலியாணத்துக்கு ஒரு தங்கை இருக்கிறாள் என்பதையும் மறத்துவிடாதே.மாதா மாதம் எங்களுக்கு வீட்டுச்செலவுக்கு அனுப்ப வேண்டியதை அனுப்பு. சிக்கனமாக இருந்து நாலு

í

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/168&oldid=597573" இலிருந்து மீள்விக்கப்பட்டது