பக்கம்:பிறந்த மண்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி I67

காசு மீதம் பிடித்துக் கடன்களை அடைப்பதற்கும் ஏதாவது சேர்த்து வைத்தால் தான் நல்லது.

'உடம்பைக் கவனமாகப் பார்த்துக்கொள். புது இடம், புது தேசம். கடலைக் கடந்து போயிருக்கிறாய்.எது ஒத்துக் கொள்ளுமோ? எது ஒத்துக்கொள்ளாதோ? கண்ட தண்ணிரில் குளித்துக் கண்டதைச் சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக் கொள்ளாதே! அடிக்கடி கடிதம் எழுது’--என்று கடிதத்தை முடித்திருந்தாள் அவன் அன்னை.

இரண்டாவது கடிதத்தைப் பிரித்தான். அது காந்திமதி ஆச்சியிடமிருந்து வந்திருந்தது. நாய்க்காலும், பூனைக் காலும் போல சிறிதும் பெரிதுமான எழுத்துகளால் கோமு எழுதியிருந்தாள். ... '

அவன் தாய்க்குத் தான் பணஉதவி செய்ததைக் குறிப் பிட்டுவிட்டு பொதுவாக எழுதியிருத்தாள் காந்திமதி ஆச்சி.

கடிதத்தின் ஓர் ஒரத்தில் அழகிய நம்பி மாமாவுக்குக் கோமு எழுதிக் கொள்வது அக்காவுக்கும், எனக்கும் சதா உங்கள் நினைவாகவே இருக்கிறது. மறுபடி உங்களை எப் போது பார்க்கப் போகிறோம் என்று ஆசையாக இருக் கிறது’ என்று கிறுக்கியிருந்தாள்.

ஆச்சிக்குத் தெரியாமல் தபாலாபீஸில் கொண்டு போய்ப் பெட்டிக்குள் போடுவதற்கு முன்னால், கோமு தானாக அந்தச் சில வரிகளைக் கிறுக்கியிருக்க வேண்டு மென்று அழகியநம் பிக்குத் தோன்றியது. கோமுவாகவே எழுதினாளா?அல்லது பகவதி எழுதச் சொல்லித் தூண்டி னாளர்?’-இந்தச் சந்தேகம் உண்டானபோது அழகிய நம்பியின் உடலில் ஓர் இன்பகரமான புல்லரிப்பு மெல்லப் பரவியது. வயதுக்கு வயது அன்பும், அன்பைத் தெரிவிக்கும் முறையும் வித்தியாசப் படுவதை அவன் சிந்தித்து வியந் தான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/169&oldid=597575" இலிருந்து மீள்விக்கப்பட்டது