பக்கம்:பிறந்த மண்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

፳፰ff, பார்த்தசாரதி - 15

‘என்ன தங்கச்சி? என்ன நடத்தது? ஏன் கூச்சல் போடு கிறாய்?" என்று கேட்டுக்கொண்டே ஓட்டமும் நடையு மாகச் சென்றான் அழகியநம்பி. .

சிறுமிக்கு வாய் கேவியது. சொற்கள் திக்கித் திணறி வெளிவந்தன. அக்கா குடம்...தண்ணிரில...” என்று ஏதோ சொல்லிவிட்டுக் குளத்தின் ப்க்கமாகக் கையைச் சுட்டிக் காட்டினாள். - .

அழகியநம்பி ஒன்றும் புரியாமல் குளத்தின் பக்கம் திரும் பிப் பார்த்தான், அவனுக்குப் பகீரென்றது. முக்குளித்து மேலெழுந்து மறுபடியும் முக்குளிக்கும் பெண் தலை ஒன்று நீர்ப்பரப்பில் தெரிந்தது. அதற்குச் சிறிது தொலைவுதள்ளிப் 'பளபள வென்று தேய்த்து விளக்கிய ஒரு பித்தளைக் குடம் குப்புற மிதந்து தண்ணீரில் அலைபட்டுச் சென்று கொண் டிருந்தது. சிறுமியின் கேவுதல் அழுகையாக மாறிவிட்டது. "ஐயோ அக்கா...அக்கா...” என்று அழத் தொடங்கி விட் டாள். அழகியநம்பிக்கு விஷயம் விளங்கிவிட்டது. மின்னல் மின்னி மறையும் நேரம் அவனுக்கு ஒரு சிறு தியக்கம் ஏற் பட்டது. -

பிரயாணத்துக்காக எடுத்து அணிந்து கொண்டிருந்த புதிய வெள்ளைச் சலவைச் சட்டை, பையில் செலவுக்கான பணத்தோடு கிடந்த மணிபர்ஸ்-இரத்தக் குழம்பு போலி ருந்த குளத்தின் செந்நிறப் புதுவெள்ளம் -இவற்றை எண்ணி ஒரே ஒரு நொடி தயங்கினான். ஆனால், ஒரு நொடிதான் அந்தத் தயக்கம்! அடுத்த நொடியில் சிறுமியின் பிடியி விருந்து தன்னை விடுவித்துக் கொண்டு குளத்தின் நீர்ப்பரப் பில் பாய்த்தான். ஆள் பாய்ந்த அதிர்ச்சியில் தண்ணிரில் அலைகள் எழும்பிக் குதித்துக் கரையைப் போய்ச் சாடின.

தண்ணிருக்குள் அவள் உடலை உடனே பற்றிக் கரைக்குக் கொண்டுவந்துவிட அவனால் முடியவில்லை, மூன்று நான்கு தடவை முக்குளித்து மூழ்கி, வெறுங்கை யோடு எழுந்திருந்தான். ஐந்தாவது தடவையாக அவன் முக்குளித்தபோது அவளுடைய நீண்ட அளகபாரத்தின் ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/17&oldid=596638" இலிருந்து மீள்விக்கப்பட்டது