பக்கம்:பிறந்த மண்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 - கிறந்த மின்

மூன்றாவது கடிதத்தைப் படிப்பதற்காக அவன்.பிரிக்கத் தொடங்கியபோது பூர்ணா உள்ளே துழைத்தாள்.அவளுக்கு யார்மேல் என்ன கோபமோ, ஸ்பிரிங்’ கதவைப்படீரென்று இழுத்துவிட்டுக் கொண்டு வந்தாள். அழகியநம்பி அவளுக்கு மரியாதை செய்யும் பாவனையில் ஒருவிநாடி எழுந்து நின்று விட்டு மறுபடியும் உட்கார்ந்து முருகேசனின் கடிதத்தில் மூழ்கினான். 3 *

அன்புமிக்க நண்பன் அழகியநம்பிக்கு முருகேசன் வணக்கம்.நீ குறிஞ்சியூரில் இருப்பதாக நினைத்துக்கொண்டு இரண்டு நாட்களுக்கு முன் குறிஞ்சியூருக்கு ஒருகடிதம் எழுதி னேன். இன்று நீ கொழும்பிலிருந்த என்க்கு எழுதிய கடிதத் தைப் பார்த்த பின்புதான் நீ எங்கேயிருக்கிறாய் என்பது தெரிந்தது உன் விருப்பப்படியே இன்று நம்முடைய நண்பர் களுக்கு எழுதிய கடிதங்களில் உன் விலாச மாறுதலையும் - நீ இலங்கைக்கு போயிருப்பதையும் விவரமாக எழுதிவிட்டேன்.

'பரீட்சை முடிந்ததும் விடுமுறைக்குப்பின் நம் பக்கத்து ஊர்களிலேயே ஏதாவது வேலைக்கு முயற்சி செய்யலாமென் திருக்கிறேன். நீ பக்கத்தில் இல்லாமல் வெகு தொலை விற்குப் போய்விட்டாய். எனக்கு என்னவோபோல இருக் கிறது. இந்த வருஷக் கோடை நாட்களைக் கழிப்பதற்கு நம் நண்பர்கள் ஒர் அருமையான திட்டம் போட்டிருக் கிறார்கள். அதாவது, ஒரு மாதத்திற்குமேல் எல்லாரும் ஒன் தாகக் குற்றாலத்தில் தங்கி இந்தப் பக்கத்து மலைத் தோடங்களில் ஒவ்வாரிடமும் சுற்றிப் பார்க்கப் போஇ றோம். இப்போதிருந்த்ே நான் அதற்க்ான ஏற்பாடுகளை இங்கே செய்வதற்குத் தொடங்கி விட்டேன். குற்றாலத்தில் ஒரு மாதத்திற்குத் தங்கும்படியாக ஒரு விடு வாடகைக்குப் பார்த்திருக்கிறேன். இந்த நல்ல சமயத்தில் நீ இங்கு இல்லையே என்று எனக்கு வருத்தமாக இருக்கிறது. மேற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/170&oldid=597578" இலிருந்து மீள்விக்கப்பட்டது