பக்கம்:பிறந்த மண்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 பிறந்த மண்

மீண்டும் தன் நாற்காலியில் உட்கார்ந்து கடிதங்களைப் பையிலிருந்து எடுத்தான். அதுவரை பிரிக்காமல் இருந்த நான்காவது கடிதத்தின் உறை மேலாக அவன் கைக்கு வந்தது. அது யாரிடமிருந்து வந்திருக்கும்?-என்று அடக்க முடியாத ஆவலோடு பிரித்துப் பார்த்தான்

w அந்த உறையைப் பிரித்துக் கடிதத்தைப் படித்த்தும் அவனுக்குத் தலைசுற்றியது. நெஞ்சில் திகில் புகுந்தது. ஒரு பெரிய வெள்ளைக் காகிதத்தில் நட்டநடுவில் நல்ல சிவ்ப்பு மையால் பளிச்சென்று-தெரியும்படியாக இரண்டு மூன்று வரிகள் எழுதப்பட்டிருத்தன.

"அற்பனே! வேறு நாட்டிலிருந்து பிழைப்பதற்காக வந்திருக்கும் நீ பூர்ணாவின் வழிகளை எதிர்த்து அநாவசிய மாகக் குறுக்கிடாதே! .இந்த எச்சரிக்கையை மீறினால் உயி ரோடு தாய்நாட்டுக்குத் திரும்பிப் போகமாட்டாய்."

அதில் எழுதியிருந்தது இவ்வளவு தான். கடிதத்தின் மேலேயோ கீழேயோ, எழுதியவரின் முகவரியோ, கையெ ழுத்தோ இல்லை, முன்னும், பின்னும், தொடங்குதலோ, முடிவோ இல்லாமல் மெர்ட்டையாக ஒர் எச்சரிக்கை வாசகம் போலிருந்தது கடிதம். அழகியநம்பி கலக்கமடைந் தான். அதே சமயத்தில், அவனுக்கு ஆத்திரமும் உண்டா யிற்று எங்கிருந்து யாரால் போஸ்ட் செய்யப்பட்டிருக் கிறது?- என்பதற்குக் கடிதத்தின் உறைமேல் ஏதாவது அடையாளம் இருக்கிறதா-என்று உறையைக் கையில் எடுத்துப் புரட்டினான். * *

முதல்நாள் மாலை கொழும்பு ஜெனரல் போஸ்டா பீஸில் போஸ்ட் செய்யப்பட்ட கடிதம் என்பதைக் குறிக்கும் தபால் முத்திரையைத் தவிர வேறெந்த அடையா ளமும் டிறையின் மேல் இல்லை. திடீரென்று மனக்குழப் பத்தினாலும் அச்சத்தினாலும் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவ்ன் உள்ளம் உணர்ச்சி மயமாக மாறியது. கொதிப்பும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/172&oldid=597583" இலிருந்து மீள்விக்கப்பட்டது