பக்கம்:பிறந்த மண்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

472. பிறந்த,மண்'

போகிற வழக்கம் அவளிடம் இல்லை. அன்று மாலை சபாரத்தினத்தைச் சந்தித்துத் தனியாகப் பேச வேண்டும் என்று அவன் எண்ணியிருந்ததனால் சீக்கிரமே தன் வேலை களை முடித்துக்கொண்டு வெளியேறக் கருதினான் அவன்.

பூர்ணாவின் நாற்காலியில் போய் உட்கார்ந்துகொண்டு அவள் செய்துவிட்டுச் சென்றிருந்த வேலைகளை ஒவ்வொன் றாகச் சரி பார்த்தான் ஆவன். கடிதங்கள், லெட்ஜர்கள் பைல்கள் ஒவ்வொன்றாகப் பார்த்து முடிக்க ஒருமீணி நேரம் ஆகும்போல இருந்தது. அவன் பொறுமையாகக் காரியங் கனைக் கவனித்துக் கொண்டிருந்தான். மூன்றே கால் மணிக்கு ஸ்பிரிங் கதவு ஒசைப்பட்டது. நாற்காலியில் உட்கர்ர்ந்தபடியே யாரென்று நிமிர்ந்து பார்த்தான். பூர்ணா நுழைந்ததைக் கண்டதும் அவனுக்குத் தூக்கி ாரிப் போட்டது. கையும், களவுமாக அவளுக்கு முன்னால்

பட்டுக் கொண்டான் அவன்.

19. மகிழ்ச்சிப் பயணம்

அழகியநம்பி ஒரேயடியாக அதிர்ச்சியுற்றுப் போனான், பூர்ணா திரும்ப வருவாள் என்று அவனுக்குத் தெரிந்திருந் தால் அவன் அவ்வளவு துணிவாக அவளுடைய நாற்காலி யில் போய் உட்கார்ந்து பைல்களையும், கடிதங்களையும் புரட்டியிருக்க மாட்டான். ஆசிரியர் வராத சமயத்தில் அவர் உட்காரும் நாற்காலியில் ஒரு பையன் அவரைப் போல் கால் மேல் கால் ப்ோட்டுக்கொண்டு உட்கார்ந்து அவர் ம்ேஜைமேல் வைத்துவிட்டுப் போயிருந்த மூக்குக் கண்ணாடி யையும் தலைப்பாகையையும் எடுத்து அணிந்துகொண்டு அவருடைய பிரம்பைக் கையில் எடுத்து அவரைப் போலவே நடித்துக் கோணங்கி செய்யும் சமயத்தில் ஆசிரியர் திடீரென்று வகுப்புக்குள் நுழைந்து பார்த்துவிட்டால் ஒபயனுக்கு எப்படி இருக்கும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/174&oldid=597588" இலிருந்து மீள்விக்கப்பட்டது