தா. பார்த்தசாரதி - 175
அந்த நிலவொளி வீசும் முறுவல் சரிபாதிக் கவலை களைச் சுட்டுப் பொசுக்கிவிட்டதுபோல் அழகியநம்பிக்கு ஒரு நிம்மதி உண்டாயிற்று. எல்லாருக்கும் தான் வாய் இருக்கிறது எல்லாருக்கும் தான் உதடுகளும், பற்களும் இருக்கின்றன! எல்லாரும் தான் சிரிக்கிறார்கள்!
ஆனால், சபாரத்தினத்தின் இந்தச் சிரிப்பைச் சபா ர்த்தினம் மட்டும்தான் சிரிக்க முடியும் நம்பிக்கை, அன்பு, கனிவு, கவர்ச்சி, ஒளி-எல்லாம் நிறைந்த சிரிப்பு அவருடையது
சபாரத்தினம்! உங்களிட்ம் தனியாக ஒரு விஷயம் பேசவேண்டும். அதற்காகத்தான் கூப்பிட்டனுப்பினேன். உங்களுக்குக் கவலை ஏற்பட்ட்ால் நீங்கள் திருக்குறள் புத்தகத்தைத் .ே த டு கி மீ ர் க ள். எனக்குக் கவலை ஏற்பட்டால் நான் உங்களைத் தேடுகிறேன். எனக்குத் திருக்குறள் நீங்கள் தான்'-என்றான் அழகியநம்பி மெல்லச் சிரித்துக் கொண்டே. . . . . . .
. நீங்கள் என்னிடம் தனியாகப் பேசவேண்டியன்த இப்போதே சுருக்கமாகப் பேசி முடித்து விட்லாமானால் இங்கே பேசி விடுவோம். விரிவாக்ப் பேசவேண்டிய விஷய மானால் ஒர் அரைமணி நேரம் பொறுத்துக் கொள்ளுங்கள். கடைக்குள் என் வேல்ையை முடித்துவிட்டு வந்து விடுகிறேன் அன்று போல இருவரும் எங்காவது வெளியே போய் உட்கார்ந்து விரிவாகப் பேசுவோம்'- என்றார் சபாரத்தினம். • . ." - - • * : * '-> --
அப்படியே செய்யலாம். நீங்கள்போய் வேலையை முடித்துக்கொண்டு வர்ருங்கள்-என்றான். அழகியநம்பி.
'புறப்படத் தயார்ாக இருங்கள். நான்' வந்துவிடு இறேன்.-என்று சொல்லிவிட்டுக் கடைக்குள் சென்றார் சபாரத்தினம். சோமு காபி, சிற்றுண்டியை எடுத்துக் கொண்டு அறைக்குள் வந்தான், அழகியநம்பி அவற்றை