பக்கம்:பிறந்த மண்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. பிடித்த மண்

பகுதி அவனுடைய கையில் சிக்கியது. அப்படியே பிடிக்க இழுத்துக் கொண்டு கரையை நோக்கி நீந்தினான்.

கரையில் நின்றுகொண்டிருந்த அந்தச் சிறுமி இப்போது அழுவதையும் கூச்சலிடுவதையும் நிறுத்திவிட்டு அவன் அவள் அக்காவின் உடலையும் இழுத்துக்கொண்டு தண் னில் நீந்தி வருவதை வியப்புடன் பார்த்தாள்.

கொடிபோல் துவண்ட அந்தப் பூவுடலைக் கரையில் கிடத்திவிட்டு நிமிர்ந்தான் அழகியநம்பி. நிறைய தண்ணி ரைக் குடித்து மூர்ச்சையாகியிருந்தாள் அவள். அக்கா! அக்கா!"- என்று அருகில் வந்து குனிந்து தோளைப்பிடித்து உலுக்கினாள் அந்தச் சிறுமி, நீந்தத் தெரியாமல் தண்ணிரில். அகப்பட்டுக்கொண்டு அவள் விழுங்கியிருந்த தண்ணிரை முழுவதும் வெளியேற்றினாலன்றி அவளுக்குப் பிரக்ஞை. வாாதென்று அழகியநம்பி உணர்ந்தான். தண்ணிரை வெளி. யேற்ற வேண்டுமானால் அதற்கு ஒரே ஒரு வழிதான் அவனுக்குத் தென்பட்டது. ஆனால், அதைச் செய்வதற்கு அவன் கூசினான்; தயங்கினான்.அந் தப் பெண்ணின் உடலை இரண்டு கைகளாலும் தீண்டிமேலே தாக்கிக் கரகரவென்று தட்டா மாலை சுற்றுவ துபோலச் சுற்றவேண்டும். அப்படிச் சுற்றினால், தான் குடித்திருக்கிற தண்ணீர் முழுதும் குமட்டி, வாந்தியெடுத்து வெளியேறும். -

குளக்கரையோரம், பெருமாள் கோயில் வாசல், தெருச் திருப்பம்-சுற்றிலும் பார்வையைச் செலுத்தினான் அழகிய நம்பி, அவன் கண் பார்வை சுழன்ற திசைகளில் இடங்களில்

எங்கும் யாரும் தென்படவில்லை.

சிறுமி முன்போலவே அக்காவின் உடலை அதைத்துப் புரட்டிக் கூச்சலிட்டு எழுப்புவதற்கு முயன்று கொண்டிகுத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/18&oldid=596640" இலிருந்து மீள்விக்கப்பட்டது