பக்கம்:பிறந்த மண்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 179

சபாரத்தினம்! எனக்குத் தெரிந்த இரண்டு ஆங்கிலப் பெண்மணிகள் காருடன் வந்திருக்கிறார்கள். மவுண்ட் லெவினியா பீச்சுக்கு வரச்சொல்லி என்னைக் கூப்பிடு கிறார்கள் அவர்கள். நீங்களும் வாருங்கள். காரில் இடமிருக் கிறது. நாம் பேச வேண்டியதையும் அங்கேயே பேசிக் கொள்ளலாம்!”-என்று சபாரத்தினத்திடம் கூறினான்.

அவன் கூறியதைக் கேட்டதும் சபாரத்தினம் சிறிது தயங்கினார்

r’ - "நான் உடன் வருவதை அவர்கள் விரும்புவார்களோ, என்னவோ?’’ - -

"அதெல்லாம் ஒன்றுமில்லை! நான் அவர்களைக் கேட்டுக் கொண்டு விட்டேன். அவர்களும் விரும்புவதால் தான் உங்களை உடனழிைக்கிறேன்.” -

"சரி! நானும் வருகிறேன். போகலாம்; வாருங்கள்' சபாரத்தினமும் உட்ன் புறப்பட்டார். காருக்கு அருகில் வந்ததும் சபாரத்தினத்தை மேரிக்கும் லில்லிக்கும் அறிமுகப் படுத்தினான் அழகியநம்பி, சாரத்தினம் மேரிக்கும், லில்லிக்கும், தன் வணக்கத்தைக் கூறினார். * --- - -.

எல்லாரும் ஏறிக்கொண்டதும் கார் புறப்பட்டது. மேரியும், லில்லியும் முன், nட்டில் உட்கார்ந்துகொண்டு விட்டதனால் பின் எபீட்டில் அழகியநம்பியும், சபாரத் தினமும் தனித்து விடப்பட்டனர். அழகிய நம்பி தன் சட்டைப் பையிலிருந்து மெல்ல அந்தக் கடிதத்தை எடுத்துப் பிரித்துச் சபாரத்தினத்திடம் கொடுத்துக் காட்டினான். சபாரத்தினத்தின் கண்கள் அந்தக் கடிதத்தை மேலும், கீழுமாக உற்றுப் பார்த்தன. அழகியநம்பியோ சபா ரத்தினத்தின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அதைப் படித்துவிட்டுக் கேலியாகச் சிரித்தார் சபாரத் தினம். இதுவரை அவர்களுக்கிடையே நடந்த இவ்வளவும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/181&oldid=597604" இலிருந்து மீள்விக்கப்பட்டது