பக்கம்:பிறந்த மண்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 பிறந்த மண்

குறிப்பாலும் கைச்சாடைகளாலும், மெளனமாகவே நடை பெற்றன. கடிதத்தை மடித்துப் பைக்குள் வைத்துக் கொண்டே, என்ன? சிரிக்கிறீர்கள்'- என்று மிகவும் மெதுவான குரலில் கேட்டான் அழகியநம்பி. சபாரத்தினம் கூறினார்:- -

'இது ஒன்றோடு நின்றுவிட்டது. இப்படி எத்தனையோ வரும். என்னென்னவெல்கrகே: நடக்கும் பயப்படக் கூடாது.” -

"நீங்கள் என்ன சொன்சிறித்தள்? தெளிவாக எனக்கு விளங்கும்படி சொல்லுங்கன்”

ஒன்றுமில்லை!...இப்போது வேண்டாம். தனியாகப் பேசுவோம்’-என்று சொல்லி முன்ளtட்டின் பக்கமாகக் கையைக் காட்டினார் சபாரத்தினம். அவருடைய அந்தக் குறிப்பைப் புரிந்துகொண்டு பேச்சை நிறுத்தினான் அழகிய நம்பி

கார் லெவினியாவின் எழில்வளம் மிக்க கடற்கரையை நெருங்கிக் கொண்டிருந்தது. ஆரலிமுகக் கடற்கரையைவிட. லெவினியாக் கடற்கரை அதிர்மான இயற்கை வனப்புடன் விளங்கியது. கரையோரமர்க் அணிவகுத்து நிற்கும் தென்னைமரக் கூட்டமும் சிறிதும் பெரிதுமான பாறை க்ளும், இன்னும் வருணனையிலடங்காத இயற்கைக் காட்சி களும், அந்த மாலை நேரத்தில், அந்த இடத்தைத் தேவ லோகமாக மாற்றிக் கொண்டிருந்தன. கடற்கரையில் வெள்ள்ைக்காரர்களின் கூட்டமே அதிகமாக இருந்தது. திறந்த உடம்போடு காற்று வாங்கிக் கொண்டிருந்தனர். கடல் அலைகளில் ப்ேரித்ம் சிறிதுமாகப் Aத்துகளை வீசி எறிந்து அவை கரைக்கு அடித்து வரப்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். சிலர். வேறு சிகர் வீசி எறிந்த பத்துகளைப் பாய்ந்து சென்று எடுத்து வருவதற்காகத் தம்முடைய அழகான உயர்சாதி நாய்களை அலைகளின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/182&oldid=597607" இலிருந்து மீள்விக்கப்பட்டது