பக்கம்:பிறந்த மண்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 183

விநாடியிலேயே அவளை வேலையைவிட்டுத் துரத்திவிடப் போவது போலத் திட்டுவார். நாளைக்கே ஏதாவது ஏடா கூடமாக நடத்துவிட்டால் பூர்ணாவுக்காக உங்களை வேலையை விட்டு நீக்குவாரேயல்லாமல் உங்களுக்காகப் பூர்ணாவை வேல்ையிலிருந்து நீக்கமாட்டார். சோளக் கொல்லைக்குள் காக்கை குருவிகள் நுழைந்து, தானியக் கதிர்களை அழித்துவிடாமல் மூங்கில் குச்சியில் துணிப் பொம்மை கட்டி நட்டுவைப்பது போல், கடையின் சொத்துகளில், இலாபத் தொகையில் பூர்ணா ஏராள மாகச் சூறையாடிவிடாமல் உங்களை ஒர் அரட்டலுக்காக உட்கார்த்தி வைத்திருக்கிறார்; அவ்வளவுதான்.”

நீங்கள் சொல்வதையெல்லாம் கேட்டால் எனக்கு ஒரே பயமாக இருக்கிறது. சபாரத்தினம்! நான் ஒன்றுசெய்து விடலாமென்று நினைக்கிறேன். பிரமநாயகத்திடம் சொன் னால் அவர் என்னை விடமாட்டார். எனக்கு இந்தச் சூழ்நிலையில் இப்படிப்பட்டவர்களுக்கு நடுவே வேலை பார்க்கப் பிடிக்கவே இல்லை. நான் யாரிடமும் சொல்லாமல் ஊருக்குக் கப்பலேறிப் போய்விடுகிறேன். இதுதான் எடைசியாக எனக்குத் தோன்றுகிற வழி' என்ற அழகிய ததியின் பேச்சிலிருந்து அவன் ஏக்கமும் தாழ்வு மனப் பான்மையும் கொண்டிருக்கிறானென்று தெரிந்தது. சபா ரத்தினத்தை நோக்கி அவன் கூறிய சொற்களில் அவநம்பிக் கையும், கையாலாகாத்தனமும் கலந்திருந்தன.

சடாரத் தினம் அவன் கூறியதைக் கேட்டு அவருக்கே உரிய கவர்ச்சி முத்திரையோடு சிரித்தார். "அழகிய நம்பி! நீங்கள் இப்போது பேசுவது நல்லதாக எனக்குப்படவில்லை. நீங்கள் வந்திருக்கும் இதே வேலைக்கு வேறோர்.இளைஞர் வந்திருந்தால் இதற்குள் இருபது தடவையாவது பூரணா வின் வீட்டுக்குப் போயிருப் :ார். அவளுக்குப் பின்ன்ால் நாய்க்குட்டியாகச் சுற்றத் தொடங்கியிருப்பார். ஆனால் நீங்கள் அந்த விஷயத்தில் வெற்றி பெற்றுவிட்டீர்கள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/187&oldid=597619" இலிருந்து மீள்விக்கப்பட்டது