பக்கம்:பிறந்த மண்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 பிறந்த மண்

கொண்டுவா.'-அவள் வந்தவனுக்குக் கட்டளையிட்டாள். வந்தவன் அவள் சொன்னதைச் செய்வதற்காக வெளியே போனான்.

அழகிய நம்பி இன்னும் நின்ற இடத்திலேயே அசையாமல் நின்றுகொண்டிருந்தான். நடக்கிறதெல்லாம் நடக்கட்டும். பிழைப்புத்தேடி வந்த இடத்தில் எத்தனை சூழ்ச்சிகளுக்கும். தொல்லைகளுக்கும் ஈடு கொடுக்கவேண்டுமோ? பொறுத் திருந்து பார்ப்போம். நமக்கு வெற்றி கிடைக்கவேண்டாம். நம்முடைய பொறுமைக்காவது வெற்றி கிடைக்கிறதா இல்லையா என்று பார்த்துவிடுவோம்'.இப்படி நினைத்து விரக்தியடைந்துபோய் நின்றான் அவன். .

கதவைத் திறந்து கொண்டு பிரமநாயகமும் அவரைக் கூட்டிவரச் சென்ற பியூனும் உள்ளே நுழைந்தனர். அழகிய நம்பியின் மனத்தில் சிறிது ஆறுதல் பிறந்தது. பிரமநாயகம் தன் கட்சியில் ஆதரவாகப் பேசுவாரென்று அவன். நம்பி னான் . •

'இந்த மாதிரி நாணயக்குறைவான ஆட்களையெல் லாம் வைத்து என்னால் வேலை வாங்க முடியாது. வேலைக்கு வந்து முழுமையாக ஒருவாரம்கூட முடிய வில்லை. அதற்குள் இரண்டாயிரம், மூவாயிரம் என்று கை யாடல் செய்ய முயன்றால் கடையும், வியாபாரமும் உருப் பட்டாம் போலத்தான்.”-அவன் பிரமநாயகத்தை நோக்கிக் கூப்பாடு போட்டாள்.

அதைக் கேட்டுக் கொண்டு நின்ற அழகியநம்பிக்குப் பகீரென்றது. உதடுகள் துடிக்க, கண்கள் சிவுக்க, நிமிர்ந்து பூர்ணாவை நெருப்பெணப் பார்த்தான். ~ * * -

பிரமநாயகம் அவளுக்கு முன்னால் பெட்டிம்பாம்பாக

நின்றார். "என்ன நடிந்தது:"-அவளைப் பார்த்துக் கேட் டார் அவர், -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/192&oldid=597632" இலிருந்து மீள்விக்கப்பட்டது