பக்கம்:பிறந்த மண்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர். lmക്iു . 193.

அந்த இளம் பருவத்து உள்ளம் பொறுமையின் எல்லையை மீறிக் குமுறியது. பூர்ணாவும், பியூனும்தாம் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் அனுசரணையாக ஒத்து ழைத்து அவனுக்கெதிராகச் சூழ்ச்சி செய்கிறார்கள்! பிரம நாயகம் கூடவா அதை நம்புகிறார்?-அழகியநம்பி திகைத் தான். அவனுக்கெதிராகச் சந்தேகித்துக் கேட்டதும் அவ. னுக்கு மறுபடியும் ஆத்திரம் பொங்கியது.

"இவர்கள். பேசி வைத்துக்கொண்டு முன்னேற்பாட் டேர்டு செய்த இந்திச்சூழ்ச்சியை நீங்கள் கூடவா நம்பு கிறீர்கள்? நேற்று இந்த மேஜையில் இப்படி ஒரு செக்கை நான் பாரிக்க்வுமில்லை; எடுக்கவுமில்லை, வேண்டுமென்றே இப்படி ஒரு செக்கை எழுதி இவனிடம் கொடுத்து இப்படிச் சொல்லச் செய்வதற்கு எவ்வளவு நாழியாகும்?-அழகிய நம்பி அவரிடம் தன் கட்சியை எடுத்துக் கூறினான்.

"சி, அதிகப்பிரசங்கி எதிர்த்துப் பேசாதே."-பூர்ணா விடம் இரைத்து ஒரு வார்த்தை சொல்வதற்குப் பயப்பட்ட பிரமநாயகம் அவனிடம் பேசும்போது மட்டும் அதிக்ாரம், ஆணவம், மிரட்டல்; அலட்டல் எல்லாவற்றையும் காட் டினார். . . . .

இளம் இரத்தம் கொதித்தது. அவருக்குச் சுடச் சுடப் பதில் சொல்ல வேண்டுமென்று துடித்தது தாக்கு. உங் களை நம்பிக் கடலைக் கடந்து இவ்வளவு தூரம் வந்து விட்டேன் பாருங்கள், அதற்காக நீங்கள் என்னை என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்..” வெடுக்கென்று வாயில் வந்த சொற்களைக் கூசாமல் சொல்லிவிட்டான். அதைக் கேட்டு விட்டுப் பிரமநாயகம் கோபுத்தோடு அவனை ஏரித்துவிடுவது போலப் பார்த்தார். "நீ உள்ளே போப் இரு நான் அப்புறம் வந்து உன்னிடம் பேசிக் கொள் கிறேன்." - ..

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/195&oldid=597639" இலிருந்து மீள்விக்கப்பட்டது