பக்கம்:பிறந்த மண்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா பார்த் தசாரதி 195

யாகப் புரிந்துகொள்ளவில்லை. பிரமநாயகம் காசியவாதி. ஆடிக் கறக்கிற ம்ாட்டினிடம் ஆடிக் கறக்கவும் பாடிக் கறக் கிற மாட்டினிடம் 1ா.க் கறக்கவும்-வகையாகத் தெரிந்: தவர்." - -

அதனால்தான் மனிதனையே மாடாக மதித் துப் பேசு இறார் போலிருக்கிறது." - -

என்ன நடந்தது: ஆத்திரப்படாமல் சொல்லுங்கள்."

காலையில் பூர்ணா ஆபீஸிற்கு வந்தது முதல் நடந்த விவரங்களை அழகியதம்பி சபாரத்தினத்திற்குக் கூறினான். கூறிவிட்டுச் சபாரத்தினத்தின் முகத்தை ஏறிட்டுப் பார்த் தான்.

"இவ்வளவுதானே? இதற்காகவா இப்படிப் பொறுமை யிழந்து ஆத்திரப்படுகிறீர்கள்? பூர்ணாவின் சாகலமும், திறமையும் நூற்றில் ஒரு பங்கு கூட இந்தச் சூழ்ச்சியில் இடம்பெறவில்லையே! இதைவிடப் பெரிய பயங்கரமான சூழ்ச்சிகளையெல்லாம் தாங்க வேண்டியிருக்கும். அன்றைக்கே லெவினியா கடற்கரையில் நான் சொல்லவில் லையா?-நேர்மை நியாயம், உண்மை இவற்றிற்குப் பயந்த மனமுடையவர்கள் வியாபார உலகத்தின் பக்கத்தில் கூட வரக்கூடாது

"சூழ்ச்சி. வஞ்சகம், சிலவற்றைத் தெரிந்து கொண்டும். தெரியாததைப் போல நடித்தல், இன்னும் சிலவற்றைத் தெரிந்து கொள்ளாமலே தெரிந்து கொண்டதுபோல நடித் தல்.-இதெல்லாம் பழகிப் பழகி மரத்துப் போனவர்கள். தாம் வியாபாரத் துறையில் வெற்றிபெற முடியும்.”

"நான் வியாப்ாரி இல்லையே! வ்ெற்றியையும், தோல்வி. யையும் தேடிக்கொண்டிருப்பதற்குச் சொந்த வியாபாரமா, பாழ்போகிறது'-அழகியநம்பி குறுக்கிட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/196&oldid=597641" இலிருந்து மீள்விக்கப்பட்டது