பக்கம்:பிறந்த மண்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 - பிறந்த மண்

"தெருக்கோடியிலே ஓர் இட்லிக்கம்ை. இருக்கிறதே.

அதுதான்!” அந்தச் சிறுமி இட்லிக்கடை அடையாளத்தைச். சொன்னவுடன் அழகியநம்பிக்கு அவர்கள் இன்னாரென்பது புரிந்துவிட்டது. - - -

"அடேடே! இட்லிக்கடை காந்திமதி ஆச்சி. பெண்கள்ா நீங்கள்?" - -

"ஆமாம். ஆச்சியைத் தெரியுமா உங்களுக்கு?’ சிறுமி யின் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லாமல் குபிரென்று கீழே குனிந்து கனமற்றிருந்த அந்தப் பெண்ணின் உடலைத் தாக்கிக்கிறுகிறுவென்று சுழற்றினான். இவ்வளவு நேரத்திற்

குப்பின்பும், இவ்வளவு தெரிந்த பின்பும் தயங்கிக் கொண்டி ருந்தால் அந்தப் பெண்ணின் உயிருக்கே ஆபத்தாகி விடுமோ என்று பயந்துதான் அவன் துணிந்து இப்படிச் செய்தான். குமட்டலும் ஓங்கரிப்புமாக அவள் வாயிலிருந்து கொட்டிய

தண்ணிரெல்லாம் அவன்மேல் பட்டன. அந்தப் பெண் குடித்

திருந்த தண்ணீர் முழுதும் துப்புரவாக அவள் வயிற்றி லிருந்து வெளியேறியிருக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டதும் 'மெதுவாக அவள் உடலைக் கீழே வைத்தான். அத்தனை நேரம் சுற்றிய கைகள் தோள்பட்டையில் வலியைச் சேர்த்து வைத்திருந்தன. தோள்கள் இலேசாக வலித்தன.

அவள் உடல் அசைந்து புரண்டது. பிரக்ஞை வருவதற் கான அறிகுறிகள் தென்பட்டன. 'உன் அக்காவின் பெயர் என்ன?" என்று அந்தச் சிறுமியைக் கேட்டான் அழகியநம்பி.

- அக்காவின் பெயர் பகவதி. என் பெயர் கோமு!’ என்று அவன் கேட்காத தன் பெயரையும் கூறினாள் சிறுமி.

அவள், "கோமதி என்று ப்ேரு: அக்கா, அம்மா எல்லாரும் கோமு, கோமு என்றுதான் கூப்பிடுவார்கள்"

என்று மறுபடியும் தான்ாக நினைத்துக் கொண்டு சொல் கிறவள் போல் சொன்னாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/20&oldid=596644" இலிருந்து மீள்விக்கப்பட்டது