பக்கம்:பிறந்த மண்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iş8 பிறந்த மண்

இல்லையா? ാപേti് சோமுவின் கையிலிருந்து தேநீரை வாங்கி அவனிடம் நீட்டினார் பிரமநாயகம்.

நீங்கள் குடியுங்கள். மீதமிருந்தால் பூர்ணாவுக்குக் கொடுத்தனுப்புங்கள். எனக்குத் தேவை இல்லை.” அழகிய நம்பி முகத்தைத் திருப்பி எங்கோ பார்த்துக் கொண்டு அவர் கொடுத்த தேநீரை மறுத்தான். அநாவசியமாகக் கோபப் படாதே தம்பீ! என் நிலையை விவரமாகக் கேட்டுத் தெரிந்துகொண்டால் நீ என்மேல் கோபப்படமாட்டாய். மறுக்காமல் தேநீரை வாங்கிக்கொள்...." அவர் கெஞ்சினார், குழைந்தார். வாங்கிக் கொள்ளாவிட்டால் மனிதர் அழுது விடுவார் போலிருந்தது.

அவர் நிலை பார்க்கப் பரிதாபமாக இருந்தது. ஆத்திர மடைந்து முறுகிப் போயிருந்த அழகிய நம்பியின் மனம் பிரமநாயகத்தின் முகத்தைப் பார்த்தபோது நெகிழ்ந்தது.

தேநீரைக் கையில் வாங்கிக் கொண்டான். சிறிது நேரம் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றான். பின்பு தேநீரைப் பருகினான்.

அவன் உடலும் உள்ளமும், புதிய சுறுசுறுப்பை அடைந் திருந்தன. பிரமநாயகம் நாற்காலியில் உட்கார்ந்தார். அவனையும் எதிரே இருந்த மற்றொரு நாற்காலியில் உட்காரச் செய்தார். ஏதோ விரிவாகச் சொல்லப்போகிறா ரென்று அவருடைய முகக் குறிப்பிலிருந்து தெரிந்தது.

அவர் வாயைத் திறந்து சொல்லத் தொடங்குவதற்கு முன் அழகியநம்பி முந்திக் கொண்டான். தன் மனத்தி விருந்ததைத் தெளிவாக அவரிடம் சொல்லத் தொடங்கி விட்டான். இதோ பாருங்கள்! நான் ஏழையாயிருக்க லாம். என் குடும்பத்தில் தாயும் தங்கையும் சோறு துணி யின்றி ஊரில் திண்டாடலாம். நான் கடன் பட்டிருப்ப வர்கள் என்னைக் காறித் துப்பலாம். அதையெல்லாம் நான் சகித்துக் கொள்வேன். உங்களோடு பிழைப்பைத் தேடித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/200&oldid=597651" இலிருந்து மீள்விக்கப்பட்டது