பக்கம்:பிறந்த மண்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 பிறந்த மண்

ஓரிடத்திலிருந்து கண்காணிக்க வேண்டியதை மட்டும் கண் காணித்துக் கொண்டால் போதும்.”

"நாளை முதல் ஒரு வாரத்திற்கு நான் இந்த நகர எல்லைக்குள்ளேயே இருக்கப் போவதில்லை." --

ஏன்? எங்கே போகப் போகிறாய்?-பிரமநாயகம் அவன் கூறியதைக் கேட்டு திடுக்கிட்டுப் போய் வினவினார்.

"இந்த நாட்டிலுள்ள அழகியமலைப் பகுதிகளைச்சுற்றிப் பார்க்கப் போகிறேன், எனக்கு மனநிம்மதி தேலை, ஒய்வு தேவை. துன்பங்களிலும், சூழ்ச்சிகளிலும், சதிகளிலும் இருந்து தற்காலிகமாக விடுதலை தேவை. இந்தக் கடைக் குள்ளேயே சேர்ந்தாற்போல இன்னும் இரண்டு மூன்று நாட்கள் அடைந்து கிடந்தேனானால் எனக்குப் பைத்தியம் பிடித்தாலும் பிடித்துவிடும்." -

பிரமநாயகத்திற்கு அவனைத் தடுக்கவோ, மறுத்துச் சொல்லவோ தெம்பில்லை- • , – -

'அதற்கென்ன? போய்ச் சுற்றிப் பார்த்துவிட்டு வாயேன்..உன்னை யார் வேண்ட ாமென்று தடுக்கிறார்கள்? நீ இந்தப் பக்கங்களுக்குப் புதியவனாயிற்றே! தனியாகப் போகப் போகிறாயா? யாராவது கூடவருகிறார்களா?-- என்று அவனிடம் கேட்டார் அவர்

விவரம் தெரிந்தவர்களோடுதான் போகிறேன்." “uri? @#2 யாழ்ப்பாணத்துப் பிள்ளையாண்டான் கூட வருகிறானோ?” . . -

இல்லை வேறு தெரிந்த மனிதர்களேர்டுபோகிறேன்." அதற்கு மேல் யார்? என்ன? எதற்காக?-என்று அண்டித்துருவிக் கேட்பதற்குத் தயங்கினார். அவர். பையன் கண்டபடி இரைந்து பேசிவிடுவானோ?--என்ற பயமும்

ன் ரூற இருந்தது, ஆகவே பேசாமல் இருந்துவிட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/204&oldid=597661" இலிருந்து மீள்விக்கப்பட்டது