பக்கம்:பிறந்த மண்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 203

“gon # 3. செலவுக்குப் பணம் ஏதாவது வேண்டுமா?"

அழிகிய நம்பிக்குத் தன் செவிகளை நம்பவே முடிய வில்லை. பிரமநாயகத்தின் வாயிலிருந்தா இந்தச் சொற்கள் வருகின்றன? துருத்துக்குடித் துறைமுகத்தில் உடன் வந்த வனை வயிறெரியவிட்டுச் சொல்லாமல் காப்பி சாப்பிடச் சென்றவர்; சாமான் துாக்கிவந்த கூலிகளுக்குச் சுமைக்கூலி கொடுப்பதில் - கருமித்தனத்தைக் காட்டியவர்: - அவரா இப்போது இப்படித் தாராளமாகக் கேட்கிறார்?-அழகிய நம்பி பதில் சொல்லாமல் அவர் முகத்தைப் பார்த்தான். உண்மையாகச் சொல்கிறாரா என்று அவருடைய முகத்தி விருந்து அனுமானிக்க முயன்றான் 'என்ன தம்பீ; அப்படிப் பார்க்கிறாய் என்னை?உனக்கு எவ்வளவு வேண்டுமோ கூசாமல் கேளேன்?

'இல்லை! எனக்குப் பணம் எதுவும் தேவையில்லை" அவனுடைய பதில் உறுதியாக வெளிவந்தது. அப்போதுள்ள சூழ்நிலையில் பிரமநாயகத்திடம் பணம் வாங்குவது அவரோடு தன்னை மேலும் இறுக்கிப் பிணித்துக் கொள்வ தற்குக் காரணமாகும் என்று அவன் மனதிற்பட்டது. எது வாயிருந்தாலும் அப்போது அவரிடம் கைநீட்டி வாங்குவது முறையில்லை’-என்று அவன் உள் மனத்திலிருந்து கண்டிப் பான-கட்டாயமான ஒரு கட்டளை பிறந்தது. அவன் வேண்டாமென்று சொல்லியபின் அவரும் அதிகமாக வற் புறுத்திக் கொண்டிருக்காமல் அந்தப் பேச்சையே விட்டு விட்டார்.

எப்போது புறப்படப்போகிறாய்? எப்போது திரும் புவாய்' . . . - - - -

'இன்று மாலை அவர்கள் வீட்டுக்குப் போய் அவர் களோடு இருந்துவிட்டு நாளைக் காலையில் அங்கிருந்தே புறப்படுகிறேன். சுற்றிப் பார்த்து முடிந்ததும் திரும்பு வேன்.' - - -- -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/205&oldid=597663" இலிருந்து மீள்விக்கப்பட்டது