பக்கம்:பிறந்த மண்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

zos பிறந்த மண்

போய்விட்டுப் பத்திரமாகத் திரும்பி வந்து சேர்!. அதற்குள் இங்கே உனக்கிருக்கும் தொல்லைகளைச் குறைத்து நீ நிம்மதியாக வேலை செய்வதற்கேற்ற சில வசதிகளை நான் செய்து வைக்கிறேன்.”

"என்ன செய்வீர்களோ? செய்யமாட்டீர்களோ! உங்க ளிடம் நான் வேண்டிக் கொள்வதெல்லாம் இதுதான்! நான் இங்கே வேலை பார்ப்பதற்காக நீங்கள் வசதிகளைச் செய்து கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. தொல்லை களைப் பெருக்காதீர்கள். சூழ்ச்சிகளுக்கும் சோதனைகளுக் கும், என்னை ஆளாக்காதீர்கள். அதைத்தான் நான் விரும்பு, கிறேன்.”

அவர் பதில் சொல்லவில்லை. அழகியநம்பி புறப்படுவ தற்குத் தயாரானான். பிரயாணத்திற்கு வேண்டி துணி மணிகளையும் மற்றவற்றையும் சூட்கேஸில் எடுத்துவைத் துக் கொண்டான்.

"சாப்பிட்டுவிட்டுப் போகலாம் தம்பி! மாலையில் தானே அவர்கள் வீட்டில் இருக்கவேண்டுமென்று கூறினாய்: இப்போது இரண்டு மணிதானே ஆகிறது? நானும் இதுவரை சாப்பிடவில்லை. வா இரண்டுபேரும் சேர்ந்தே சாப் பிடுவோம்.” -

அழகியநம்பிக்கு அப்போது அவர் தடந்துகொள்கிற

விதம் புதுமையான விந்தையாக இருந்தது. திடீரென்று

அவர் ஏன் அப்படி அன்பே உருவான மனிதராக மாறி

நெகிழ்ந்து தணிந்து போகிறாரென்று வியந்தான் அவன்.

'சூதுவாதில்லாத ஒரு நல்லவலுக்கு அறிந்தோ, அறியா

மலோ துன்பம் செய்துவிட்டவர்கள், தாங்கள் செய்த

துன்பத்தை அவனே எடுத்து உணர்த்தும்போது மனத்தி லுள்ள சகலவிதமான ஆணவங்களும் அழிந்து நிற்

கிறார்கள்-என்று மனவியல் நூலில் எப்போதோ கல்லூரி நாட்களில் படிந்திருந்த ஒரு சிறு உண்மை அழகியநம்பிக்கு நினைல் வந்தது - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/206&oldid=597665" இலிருந்து மீள்விக்கப்பட்டது