பக்கம்:பிறந்த மண்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 205.

பிரமநாயகம் அந்த நிலையை அடைந்து விட்டாரா? அவரைப் பார்க்கும்போது உண்மையில் அவனுக்கு அப் போது மிகவும் பரிதாபமாக இருந்தது. எதையோ நினைத்து நினைத்து ஏங்குவது போலிருந்தது அவருடைய முகச் &ᏳfᎢ Ꭷ☽ üᏗ . • ,

அழகியநம்பியின் மனத்தில் அப்போது தோன்றியது. இது அடடா பணத்தை இலட்சக்கணக்கில் சேர்த்து வைத்துக் கொண்டிருப்பவன் உல்லாசத்தில் மிதப்பதாக நானும் என்னைப் போன்ற பஞ்சைகளும் சில சமயங்களில் எண்ணுகிறோம்: இந்த பிரமநாயகம் இலட்சக்கணக்கில் சேர்த்து வைத்துக் கொண்டும் நிம்மதியாக வாழ முடிய வில்லையே. முப்பது வயதுக்குட்பட்ட ஒரு பெண் பிள்ளை இவரையும் இருவருடைய வியாபாரத்தையும் இந்த ஆட்டு ஆட்டி வைக்கிறாளே? -

அவன் அவருடைய விருப்பத்தை மறுக்கவில்லை. அவ ரோடு சேர்ந்து சாப்பிட உட்கார்ந்தான். இருவருக்கும் பக்கத்தில் பக்கத்தில் இலை போட்டிருந்தான் சோமு. வழக்கமாக ஒவ்வொரு நாளும் சமையல் ஆனவுடன் முதலிலேயே இலைபோட்டு அவருக்குத்தனியாகச் சாப்பாடு போடவேண்டும். இன்று முதலாளியே சேர்த்து இலை போட்டுப் பரிமாறச் சொல்லியது சோமுவுக்கே ஆச்சரிய மசீக இருந்தது

சாப்பிடும்போது ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள வில்லை. பணச் செருக்குள்ளவர்களுக்கு மட்டுமே இருக்கக் கூடிய ஒருவகைக் கம்பீரம், அலட்சிய சுபாவம், எடுத் தெறிந்து பேசுகிற தன்மை, இதெல்லாம் பிரமநாயகத் திட்ம் வழக்கத்திற்கு மாறாக அன்று இல்லாமலிருந்தை அழகியநம்பி கூர்ந்து கவனித்தான். • ,

எதை நினைத்தோ-எதற்காகவோ உள்ளுக்குள்ளேயே அவர் ஏங்கிக் குமைகிறார் என்று அவன் நினைத்தான்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/207&oldid=597668" இலிருந்து மீள்விக்கப்பட்டது