பக்கம்:பிறந்த மண்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீர். பார்த்தசாரதி 19

அதைக் கேட்டு அழகிய நம்பி மெல்லச் சிரித்துக்கொண் டான். 'மாமா! மாமா! குடம் இன்னும் தண்ணிரிலேயே மிதந்துகொண்டு போகிறதே!” என்று தண்ணிரில் மிதந்து சென்றுகொண்டிருந்த குடத்தைக் காட்டினாள் சிறுமி.

"ஓ! மறந்துவிட்டேன்" என்று சொல்லிக்கொண்டே குடத்தை எடுப்பதற்காக மீண்டும் தண்ணீரில் இறங்கினான் அழகியநம்பி, - - -

அதே சமயத்தில் அந்தப் பெண்ணுக்குப் பிரக்ஞை வந்தது. தூக்கம் விழித்துச் சோம்பல் முறித்துக்கொண்டே எழுந்திருக்கிறவளைப் போல் எழுத்திருந்தவள் தானிருக்கிற நிலையைப் பார்த்ததும் லாசிச் சுருட்டிக்கொண்டு எழுந்தி ருந்தாள். "அக்கா அக்கா இந்த மாமா தான் குளத்தில் குதித்து நீந்தி உன்னைக் கரைக்குக் கொண்டுவந்து சேர்த்தவர்” என்று அடக்கமுடியாத ஆவல் பொங்கக் கூறினாள் சிறுமி கோமு. குடத்தோடு கரையேறிய அழகிய நம்பி கோமுவிடம் கொண்டு வந்து கொடுத்தான்.

"ஊரே மூழ்கிப் போய்விடும் போல வெள்ளம் வந்து இப்போதுதான் ஒருமாதிரி வடிந்திருக்கிறது. குளம் நிமிர நிமிரத் தண்ணிர் இருக்கும்போது நீந்தத் தெரியாதவள் இப்படி வரலாமா?-அழகியநம்பி அவளிடம் கண்டிப்பது போன்ற தொனியில் கேட்டான், ".

"குடத்தில் தண்ணிர் முகப்பதற்காகப் படியில் கால் வைத்தேன். வழுக்கிவிட்டது."-அவனை நிமிர்ந்து பார்க்குத் திறனின்றிக் குனிந்துகொண்டே பதில் கூறினாள் அவள். நாணம் ப்டர்ந்த அந்த மதிமுகத்தில் சிவந்த உதடுகள் இலேசாகத் துடித்தன. வனப்பே வடிவமாக இளமை கொழித்து நிற்கும் அந்தப் பெண்ணின் தோற்றத்தைக் கடைக்கண்களால் ஒரு முறை நன்றாகப் பார்த் தான். இப்போது அவள் குடத்தையும் இடுப்பில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/21&oldid=596646" இலிருந்து மீள்விக்கப்பட்டது