பக்கம்:பிறந்த மண்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 பிறந்த மண்

மே#. 'இல்லை! இன்றிரவு ஏழு மணிக்கு விவேகாநந்த சபையில் தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கும் புலவர் ஒருவர் சொற்பொழிவு செய்கிறார். நான் அதனைக் கேட்கப்போக வேண்டும்..” என்று அவளிடமும் அழகிய நம்பியிடமும் கூறி விட்டுச் சென்று விட்டார் சபாரத்தினம். நிறத்தினாலும், பிறந்த நாட்டினாலும், பண்பினாலும், வேறுபட்டு அன்பி னால் ஒன்றுபட்ட அந்த வெள்ளைக் குடும்பத்திற்கு இடையே அழகிய நம்பி தனித்துவிடப்பட்டான். இரண்டு ' பக்கத்திலும் பக்கத்திற்கு ஒருவராக நாற்காலியைப் போட்டுக்கொண்டு அவனருகே மேரியும் லில்லியும் உட்கார்ந்து விட்டார்கள். சிரிப்பும் வேடிக்கையுமாகக் குழந்தைகளுக்கு ஒரு நல்ல பொம்மை கிடைத்து விட்டால் அவர்கள் அதை வைத்துக்கொண்டு விளையாடுகிற மாதிரி அவனை வைத்துக் கொண்டு விளையாட்த் தொடங்கி விட் டார்கள்:

திருமதி வோட்ஹவுஸ் இரவு விருந்துக்கான ஏற்பாடு களைக் கவனித்துக் கொண்டிருந்தாள். வோட்ஹவுஸ் அவர் களோடு உட்கார்ந்து சிரிப்பிலும், பேச்சிலும் கலந்துகொண் டார். அவரைப் பார்த்தால் இராணுவ உத்தியோகஸ்தர் மாதிரியே தெரியவில்லை. முரட்டுச் சுபாவம் கடுகடுப்பான முகச்சாயல்-இப்படி இராணுவத் துறையில் இருப்பவர் களுக்கு உரியனவென்று அழகியநம்பி நினைத்து வைத் திருந்த குணங்களில் ஒன்றுகூட அவரிடம் இருப்பதாகத், தெரியவில்லை t

வயதானவராயினும், இளைஞர்போல்க் காட்சியளித் தார். பேச்சு, சிரிப்பு, முகம், நடை,உடை-எல்லாவற்றிலும்ே அவரிடம் இளமை இருந்ததை அவன் கவனித்தான். தம் பெண்களுக்கு முன்னால் தாம் தகப்பன் என்ற தனிக் கெளரவம் கொண்டாட முயலாமல் அவரும் ஒரு குழந்கை யாக மாறிக் குறும்புகளிலும் விளையாட்டுப் பேச்சுகளிலும் பங்கு கொண்டது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/210&oldid=597675" இலிருந்து மீள்விக்கப்பட்டது