பக்கம்:பிறந்த மண்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தர். பார்த்தசாரதி 2ii

னைக்காரர்கள் வாழ்க்கையைம்ே ஒர் இன்பப் பொழுது போக்காகப் பழகியிருக்கிறார்களே! கவலையும் மனத் துய ரமும் இல்லாமல் எப்போதும் சிரித்துக்கொண்டே இவர் களால் எப்படி வாழ முடிகிறது? திடீரென்று வோட்ஹவுஸ் கூறினார்:- “நீங்கள் மூன்று ஆப்பிளையாவது சாப்பிட வில்லையானால் உங்களை ஓர் ஆண்பிள்ளை-ஓர் இளைஞர். என்று நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்.”

இருங்கள், அப்பா! நீங்கள் குறைவாகச் சொல்லு கிறீர்கள். என் கையால் நான் நறுக்கிக் கொடுத்தால் இந்த மனிதர் ஆறு ஆப்பிள் கூடச் சாப்பிடுவார்’-என்று மேரி ஆப்பிள்களை நறுக்கி அவன் பிளேட்டில் குவிக்கத் தொடங்கி னாள்.இன்னொரு பக்கத்தில்லில்லிஅவன் பிளேட்தாங்காமல் ரொட்டியை அடுக்கி வெண்ணெயையும் சர்க்கரைப் பாகை யும் (ஜாம்) தடவிக் கொண்டிருந்தாள்.

"ஏதேது? நீங்கள் இரண்டு பேரும் போட்டி போட்டுக் கொண்டு உபசரிக்கிற தடபுடலில் அவரை நிதானமாகச் சாப்பிட விடமாட்டீர்கள் போலிருக்கிறதே’’ என்று பெண் களைச் செல்லமாகக் கடிந்து கொண்டாள் திருமதி வோட் ஹவுஸ் - -

'இன்னும் ஐந்தாறு நாட்கள் மலைநாட்டு ஊர்களில் சுற்றப் போகிறார்கள். போகிற இடங்களில் ஹோட்டல்களி' லும் ரெஸ்ட்ஹவுஸ்களிலும் இப்படிப் போட்டி போட்டுக் கொண்டு உபசரிக்க முடியாதே! அதனால்தான் இங்கேய்ே செய்கிறார்கள்”-வோட்ஹவுஸ் கூறினார். ... • -

சாப்பிட்டு முடிந்தபின்பும் வெகுநேரம் பேசிக்கொண் டிருந்தார்கள். காலையில் பிரயாண்த்துக்காக விரைவில் விழிக்க வேண்டுமென்று திருமதி வோட்ஹவுஸ் எச்சரித்து அவரவர்களைப் படுத்து உறங்க அனுப்பினாள். மேல் மாடியில் தனியாக இருந்த விருந்தினர் அறையில் அழகிய நம்பி படுத்தான். பக்கத்தில் கூப்பிடு தூரத்தில் கடல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/213&oldid=597682" இலிருந்து மீள்விக்கப்பட்டது