பக்கம்:பிறந்த மண்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 - - - பிறந்த மண்

கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்”-உன்று வில்லி ஆத்திர்த் தோடு குறுக்கிட்டுக் கூறினாள். மேரி தனது கவர்ச்சிகரமான வட்ட விழிகளை உருட்டிக் கோபத்தோடு லில்லியை உறுத்துப் பார்த்தாள். அழகிய நம்பிக்கு இருபக்கமும் தர்ம சங்கடமாக இருந்தது

'நீங்கள் இரண்டு பேரும் இந்த மாதிரிச் சண்டை போட்டுக்கொண்டால் நான் எதையும் பார்க்காமல் கண்களை மூடிக்கொண்டு வரவேண்டியதுதான்”-என்று விளையாட் டாகச் சொல்வது போல் சிரித்துக்கொண்டே சொன்னான் அவன்.

அதுவரிை பேசாமல் வந்த டிரைவர் பின்புறம் திரும்ப அழகிய நம்பியைப் பார்த்துச் சிரித்துவிட்டு, “நீங்கள் ஒரு சட்டம் போட்டு விடுங்கள் ஐயா! கார் போகிற சாலையின், வலப்புறம் வருகிற முக்கியமான காட்சிகளைப் பற்றி மேரி அம்மா மட்டும் தான் கூறலாம். அதே மாதிரி இடப் புறம் வருகிற காட்சிகளைப்பற்றி வில்லி அம்மா மட்டும்தர்ன் சொல்லலாம். இப்படிப் பிரித்துக் கட்டுப்பாடு செய்து விட்டீர்களானால் அவர்களுக்குள் சண்டையே வராது! எப்படி நான் சொல்லுகிற யோசனை?’-என்றான். அந்த டிரைவர் உண்மையாகவே அப்படிச் சொல்கிறானா? அல்லது கேலி செய்கிறானா? புரிந்துகொள்வதற்குச் சிறிது நேரமாயிற்று அழகிய நம்பிக்கு, -

விளையாட்டோ, கேலியோ-அதே ஏற்பாட்டை சிரித்துக்கொண்டே அவர்களிடம் சொல்லி ஒப்புக்கொள்ள வைத்தான் அழகியநம்பி. கார் டிரைவரும் நகைச்சுவை இயல்பு வாய்ந்த இளைஞனாக இருந் தான். அவன் திருத்த மாகத் தமிழ் பேசியதைக்கேட்டு, உனக்கு எந்தப் பக்கம்?" என்று விசாரித்தான் அழகிய நம்பி. மட்டக் களப்புப் பக்கம்; நானும் தமிழன்தான். நீங்கள் தமிழ் நாட்டுத் தமிழர். நான் ஈழத்தமிழன்’-என்று மறுபடியும் சிரித்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/216&oldid=597689" இலிருந்து மீள்விக்கப்பட்டது