பக்கம்:பிறந்த மண்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

żłể பிறந்த டின்

'இதுவா? இங்கே இது ஒரு வழக்கம். மலைப்பகுதி களில் ஏறுமுன் விபத்து முதலிய துன்பங்கள் எதுவும் ஏற்பு டாமல் செளக்கியமாகத் திரும்பி வரவேண்டுமென்று பிரார்த்தனை செய்துகொள்வோம். எல்லாருமே அநேக மாக இந்த இடத்தில் இதைச் செய்யாமல் போக மாட் 1.ார்கள்.’’- - ... "

டிரைவர் கூறியதைக் கேட்டு அழகியநம்பி குறும்புச் சிரிப்புச் சிரித்தான். டிரைவர்! உன்னைவிட நான்தான் அதிக விபத்துகளில் மாட்டிக்கொண்டிருக்கிறேன்” என்று சொல்லிக்கொண்டே வில்லியையும், மேரியையும் ஒரக்கண் களால் விஷமப்பார்வை பார்த்தான் அவன்.

பெண்கள் இருவரும் முகம் மலரப் புன்னகை செய்தனர். "அடேடே! அப்படியானால் நீங்களும் இறங்கி உண்டியலில் காசுபோட்டுப் பிரார்த்தனை செய்து கொண்டிருக்க லாமே?'-என்று வேடிக்கையாக மறுமொழி கூறினான். டிரைவர் கார் மலைப்பிரதேசத்தில் ஏறிக்கொண்டிருந்தது.

23. மண்ணைப் பொன்னாக்கும் கைகள்

கண்களின் பார்வை சென்ற இடமெல்லாம் சுற்றிலும் மலைச்சிகரங்கள், பசுமைக் காட்சிகள், முகில் தவழும் நீல் வானம், எல்லாம் கைகளால் எட்டிப்பிடிக்கிற தொலைவில் மிக அருகில் இருப்பதுபோல் தோன்றின. வளைவு, நெளிவு களும் ஏற்ற இறக்கங்களுமுள்ள மலை ரோடுகளில் கார் சென்று கொண்டிருந்தது

அழகியநம்பி ஜன்னலுக்கு வெளியே நீட்டிய தலையை உட்புறம் திருப்பவே இல்லை. மேரியும் லில்லியும் மாற்றி, மாற்றி இருபுறத்துக் காட்சிகளையும் விளக்கிச் சொல்லிக் கொண்டு வந்தார்கள். பத்து நிமிஷ நேரம் அவன் சேர்த் தா ற்போல் லில்லியின் பக்கமே பார்த்துக்கொண்டிருந்தால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/218&oldid=597694" இலிருந்து மீள்விக்கப்பட்டது