பக்கம்:பிறந்த மண்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நr. பார்த்தசாரதி - 217

மேரிக்கு முகம் வாடிவிடும். மேரியின் பக்கமே பார்த்துக் கொண்டிருந்தால் வில்லிக்குக் கோபமே வந்துவிடும்! ஒரே சமயத்தில் இரண்டு பெண் உள்ளங்களைத் திருப்தி செய்ய வேண்டியவனாக இருந்தான் அவன்.

சாலையின் இருபுறமும் வளம் நிறைந்த அந்த மலைப் பிரதேசத்து மண்ணில் அவன் யாரைக் கண்டான்? எதைக் கண்டான்? அவன் உள்ளத்தில் உயர்ந்த எண்ணங்கள் சிறந்த நம்பிக்கைகள், நல்ல உணர்ச்சிகள், ஏன் அப்படி மேலே மேலே பொங்குகின்றன? -

உழைக்கும் கைகள்! ஆம்! ஒய்வு ஒழிவில்லாமல் உழைத்து உழைத்து மண்ணைப் பொன்னாக்கும் கைகளை அவன் கண்டான். உயரமாக நெடிது வளர்ந்து வரிசை வரிசையாக ஒரே அளவில் நூல்பிடித்து நிறுத்திவைத்தாற் போன்ற வெண்ணிறத்து ரப்பர் மரங்கள். கரும் பசுமை நிறத்துத்துளிர்கள் மின்ன மலைமேல் விரித்த மரகதப் பாய்களைப் போல் தேயிலைத் தோட்டங்கள். அங்கெல் லாம் ஏழையர் கைகளை அவன் பார்த்தான்.

அவனுடைய புறச்செவிகள்தான் மேரியும். லில்லியும், டிரைவ்ரும் கூறிக்கொண்டு வந்தவற்றைக் கேட்டுக்கொண்டு வந்தன.

சிந்தனையுணர்ச்சி மிக்க அவனுடைய உள்மனம், கண் முன் தெரிவனவற்றை ஆழ்ந்து, கூர்ந்து பார்க்கும் அவனு டைய பார்வை யாவும் எதில் எதை நோக்கி இலயித் திருந்தன? -

அழகியநம்பி சிந்தித்தான். தான் பிறந்து வளர்ந்த தமிழ்ப் பூமியாகிய குறிஞ்சியூரிலுள்ள மலைகள் அவனுக்கு நினைவு வந்தன. அங்கும் மலைகளுக்குக் குறைவில்லை! இதே பேர்ல் உயர்ந்த மலைகள், வளமான மலைகள், அருவிகளும் சுனைகளும் அடர்ந்த மரக் கூட்டங்களும் உள்ள செழிப்பான மலைகள்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/219&oldid=597697" இலிருந்து மீள்விக்கப்பட்டது