பக்கம்:பிறந்த மண்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

§

§

பிறந்த மண்

இலங்கையின் இந்த மலைகளை இப்படிப் பொன் கொழிக்கச் செய்த உழைப்பு அங்கிருந்து-நான் பிறந்த தமிழ் மண்ணிலிருந்து வந்த கூவிகளின் உழைப்புத்தானே? இந்த உழைப்பும், இந்த வலிமையும், அவர்களுடைய சொந்த மண்ணுக்குப் பயன்பட்டிருந்தால் எவ்வளவு நன்றாயிருந் திருக்கும்? -

இடை வழியில் தங்களுக்குத் தெரிந்த வெள்ளைக்கார முதலாளி ஒருவருக்குச் சொந்தமான தேயிலைத் தோட்ட மொன்றிற்கு மேரியும் வில்லியும் அழகிய நம்பியை அழைத் துக்கொண்டு போனார்கள்.

ஆண்களும், பெண்களுமாக நூற்றுக்கணக்கான தமிழ் நாட்டுக் கூலிகளின் துயரந்தோய்ந்த முகங்களை அழகிய நம்பி அங்கே கண்டான். இடுப்பில் கைக்குழந்தையும், முதுகில் நீண்ட பெரிய தேயிலைக் கூடையும் சுமந்து, மேடும் பள்ளமுமான தேயிலைக் காடுகளில் அவதியுறுகிற் தமிழ்ப் பெண்மணிகளைப் பார்த்தபோது யாரோ தன் நெஞ்சை இறுக்கிப் பிழிவது போலிருந்தது அவனுக்கு. கோழிக் கூடுகள் போன்று சுகாதார வசதி இல்லாமல் கட்டிவிடப் பட்டிருந்த கூலிகளின் வீடுகளைக் கண்டபோது அவன் வருத்தம் பெருகியது. அவன் துயரப் பெருமூச்சு விட்டான். ‘மண்ணைப் பொன்னாக்கிய கைகள் மறுபடியும், மறுபடியும் மண்ணில்தான் புரண்டு கொண்டிருக்கின்றன’ என்று தன் மனதிற்குள்ளேயே சொல்லிக் கொண்டான். வில்லி-மேரி. டிரைவர்- எல்லாரோடும்தான் அவன் இருந்தான். ஆனால், மனத்தின் உலகத்தில், சிந்தனையின் வழியில் அவன் மட்டும் தனிப்பட்ட எண்ணங்களோடு தனிப்பட்ட உணர்ச்சிகளைத் தாங்கிச் சென்று கொண்டிருந்தான், -

சாதாரணமான தேயிலைக் கொழுந்துகளை உலர்த்தி அரைத்து வறுத்துத் தேயிலைப் பொடியாக மாற்றுகிறவரை உள்ள எல்லாத் தொழில்களும் நடைபெறுகிற தேயிலைத் தொழிற்சாலைக்குள் அழகியதம்பியை அழைத்துக்கொண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/220&oldid=597699" இலிருந்து மீள்விக்கப்பட்டது