பக்கம்:பிறந்த மண்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 219

போய்ச்சுற்றிக் காண்பித்தார்கள். 'பெரிய இராணுவ அதி காரியின் பெண்களோடு அல்லவா.அவன் சென்றிருக்கிறான்? தோட்டத்தின் சொந்தக்காரரான முதலாளி அவர்களை மலையுச்சியில் ஓர் அருவிக்கரையில் இயற்கை சூழ்ந்த இடத்தில் அமைந்திருந்த தம் பங்களாவிற்குள் கூட்டிச் சென்று விருந்துபசாரம் செய்தார். . . .

'அருகில் ஏதாவது இரப்பர்த் தோட்டம் இருந்தால் அன்தயும் சுற்றிப்பார்க்க வேண்டுமென்று ஆசைப்படு கிறேன்'-என்று அவரிடம் தன் விருப்பத்தைத் தெரிவித் தான் அவன். உடனே அவர்களை அழைத்துச்சென்று ஒரு இரப்பர் தோட்டத்தையும், தொழிற்சாலையையும் சுற்றிக், காண்பித்தார். மரங்களில் கோடு கிறிவிட்டு ரப்பர் பால் வடித்துக் கொண்டிருக்கும் கூலிப் பெண்களைப் பார்த்த போதும் அவன் மனத்தில் இரக்கம்தான் சுரந்தது

மண்ணில் இரத்தம், வியர்வை, அனைத்தையும் சிந்தி உழைக்கும் உழைப்பையும், சூழ்ச்சியிலும் வஞ்சகத்திலுமே உழைக்காமல் இருந்த இடத்திலிருந்துகொண்டு இலட்சக் கணக்கில் சம்பாதிப்போரின் வியாபாரத்தையும் எண்ணித் தனக்குள் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டான் அழகியநம்பி. :பிரமநாயகம், ஒவ்வொரு நாளிலும் ஆயிரக் கணக்கில் வியா பாரம் நடக்கும் அவருடைய கடை, வருமான வரிக்கும், விற்பனை வரிக்கும், பொய்க்கணக்குக் காண்பிக்கும் சாமர்த் தியம் வாய்ந்த பூர்ணா எல்லாவற்றையுமே சிந்தனையின் தொடர்பாக.அப்போது நினைத்தான் அவன். இந்த உல கத்தில் உழைக்காமல், பாடுபடாமல் பணம் திரட்டும் 邸森歌°· மானவர்கள் மேலும் திடீரென்று அடக்கவோ, தவிர்க் கிவோ இயலாததோ அருவருப்பு-குமுறிக் கொந்தளித்து எழுந்தது அவனுடைய மனத்தில், தனக்கு ஏன் அப்படிப் பட்ட மனக் கொதிப்பு அப்போது உண்டாகிறதென்று அவனுக்கு விளங்கவில்லை. வகை அவனால் கட்டுப்படுத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/221&oldid=597701" இலிருந்து மீள்விக்கப்பட்டது