பக்கம்:பிறந்த மண்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 224.

வெறுப்பும், உண்டாயினவேயல்லாது பிறந்த மண்ணை நினைத்து ஏங்கவில்லை அவன்

“என்ன? ஒரு மாதிரிக் காணப்படுகிறீர்கள்? பிரயாணம் உங்களுக்கு ஒத்துக் கொள்ளவில்லையா? அல்லது இந்த மலைக் காற்றும், குளிர்ந்த சூழ்நிலையும், பிடிக்க வில்லையா?-என்று அனுதாபத்தோடு கேட்டாள் மேரி.

ஆமாம்! நானும் அப்போதிருந்து கவனித்துக்கொண்டு வருகிறேன். ஐயா ஒரு மாதிரித்தான் இருக்கிறார்” என்று டிரைவரும் ஒத்துப் பாடினார். §

"ஏன்? உங்களுக்கு உடம்பிற்கு என்ன? -என்று பதறிப் போய்க் கேட்டாள் லில்லி

'ஒன்றுமில்லை! சும்மா இப்படி ஏதோ சிந்தித்துக் கொண்டிருந்தேன்” - என்று மொத்தமாக அவர்களுக்குப் பதில் கூறி மழுப்பினான் அவன். ஆனால், இழக்கமுடியாத, இழக்கக் கூடாத்தனக்குச் சொந்தமான ஒன்றை வலுவில் இழந்துவிட்டு வெகுதூரம் வந்துவிட்டாற் போன்று அவன் மனத்தில் உண்டாகிய தாழ்மையுணர்வை அவனால் எவ்வளவு முயன்ற்ாலும் அடக்கமுடியவில்லை. தன்னைச் சுற்றிலும் பொன் கொழிக்கும் பிறநாட்டு மண்ணைக் கண்டு துள்ளிய அவன் மனத்தில் அப்படியே குறிஞ்சியூருக்கு ஒடிப் போய், தான் பிறந்த மண்ணை இப்படி மாற்றிவிட வேண்டும்போல துடிப்பும், வேகமும் உண்டாயின.

அன்று மட்டுமன்று; அந்தத் தேயிலைத் தோட்டத்தை யும் ரப்பர் தோட்டத்தையும், அதில் உழைப்பவர்களையும் பார்த்த சில நாழிகைகளில் மட்டும் அல்ல; அதன்பின் தொடர்ந்து ஐந்தாறு நாட்கள் அவர்கள் செய்த பிரயாணத் தின் போதும் அந்தத் துடிப்பும் வேகமும், அழகியநம்பியின் மனத்தில் அடங்கவே இல்லை

இரத்தினபுரத்தின் சதுப்பு நிலங்களிலே மண்ணைக் குடைந்து விலையுயர்த்த வைரம், இரத்தினம் ஆகிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/223&oldid=597706" இலிருந்து மீள்விக்கப்பட்டது