பக்கம்:பிறந்த மண்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 பிறந்த மண்

கற்களைத் தேடி எடுப்பதை அவனுக்குக் காட்டினார்கள். இரத்தின வயல்களிலே முழங்காலளவு ஆடையுடன், மண்ணும் புழுதியும், சேறும் படிந்த கைகளாய், விலைமதிப் பற்ற..இரத்தினக்கற்களைத் தேடி எடுப்பதற்காக மண்னைக் குடைந்து தோண்டும் உழைப்பாளிகளை அ வ ன் பார்த்தான். . -

மண் மண் மண்!-அந்த மண்ணை உழைத்து உழைத் துப் பொன்னாக மாற்றலாம். தைரியமும், தன்னம்பிக்கை யும் பேராசையற்ற , மனமும் மனிதனுக்கு இருந்தால் போதும். உலகத்திலேயே குது, வாது, சூழ்ச்சி, வஞ்சனை, ஏமாற்று இவையெல்லாம் இல்லாத ஒரே தொழில்மண்ணை நம்பி உழைக்கும் தொழில்தான்.” -

தானாக ஊ து ம ஊர் கண்களைப்போல் அவள் உள்ளத் தில் சிந்தனை ஊறிப் பெருகியது. புதிய எண்ணங்கள் புதிய இடங்களைப் பார்த்ததும் வளர்ந்து கொண்டே போயின. வளம் நிறைந்த இல்ங்கையின் மலைகளில் ஒவ்வோர் அணுவிலும் உழைப்பின் ஆற்றலை, மண்ணைப் பொன்னாக் கும் கைகளை....அங்கும் இங்கும், எங்கும் கண்டான் அவன். அந்த ஆறு நாட்களில் ஒரு புதிய உலகத்தையே பார்த்து முடித்துவிட்டது போலிருந்தது.

அசோகவனம்-நுவாரா , எலியாவின் மலை வளம்: பேராதனையிலுள்ள உலகப் பிரசித்தி பெற்ற பூந்தோட்டம் கண்டியில் புத்தருடைய புனிதமான பல் வைக்கப்பட்டிருக் கும் கோயில், தம்புள்ள, சிகிரியா, குகை ஓவியங்கள்,பொலத் நறுவையின் சரித்திரச்சின்னங்கள்.ஒவ்வோர் இடத்தையும், ஒவ்வொரு புதுமைகளையும் பார்க்கப் பார்க்கத் தாயை விட்டு வெகு தொலைவு வந்துவிட்ட சிறு குழந்தையின் மனத்தில் ஏற்படுவதுபோல் பிறந்த மண்ணைப்பற்றிய ஏக்கம் அவன் மனத்தில் உண்டாயிற்று.

"நீங்கள் வேண்டுமென்றே எங்களிடம் மறைக்கப் பார்க் கிறீர்கள். கொழும்பிலிருந்து புற்ப்பட்டபின் நீங்கள் ஏதோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/224&oldid=597709" இலிருந்து மீள்விக்கப்பட்டது