பக்கம்:பிறந்த மண்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நt. பார்த்தசாரதி - 3.23

நம்பியின் கண்கள் அப்போது பார்ப்பதற்குப் பயத்தைக் கொடுத்தன. முகம் வெளிறியிருந்தது. உடல் மெல்ல நடுங் கியது. "பிரபல வியாபாரியின் மோசடிகள் அம்பலமாயின. கடையில் வேலை பார்த்துவந்த பெண் கொலை செய்யப் பட்டாள்-கொழும்பு நகரத்தில் சம்பவம்" என்று தடித்த எழுத்துகளில் கட்டம் கட்டிப் பிரசுரித்திருந்தனர்.

24. திடுக்கிடும் செய்தி

'பிரமநாயகம் வருமானவர்-விற்பனைவரி-மற்றும், வியாபாரத் துறைகளில் செய்திருந்த மோசடிகளைப் பூர்ணா காட்டிக் கொடுத்துவிட்டாள். ஆத்திரத்தில் வெறி கொண்டு அவளை அவர் குத்திக் கொலை செய்துவிட் டார்.”-பத்திரிகையில் பிரசுரமாயிருந்த விவரமான செய்தி முழுவதையும் படிக்கிற அளவுக்கு அழகியநம்பியின் கண் களுக்கோ,மனத்துக்கோ பொறுமை இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பார்த்து என்ன நடந்திருக்க வேண்டு மென்று மேலே கண்டவாறு சுருக்கமாக அனுமானிந்துக் கொண்டான். மற்றவர்களுக்கும் தெரிவித்தான்.

கார் நகரெல்லையைக் கடந்து அனுராதபுரத்தின் அடர்ந்த பெருங்காடுகளுக்கிடையே போகும் சாலையில் வேகமாகச் சென்றுகொண்டிருந்தது. அந்தக் காட்டுப் பிரதே சத்திற்குள் மிருகங்களின் பயம் அதிகமாகையினால், அதைக் கடந்து செல்கிறவரை எங்கும் நிறுத்தாமல் வேகம்ாகச் சென்றுவிட வேண்டுமென்று டிரைவர் சொல்லியிருந்தான்.

ஆனால், அழகிய நம்பியின் மனமோ, காரின் சக்கரத் தைக் காட்டிலும் வேகமாகப் பறந்து செல்ல முடியுமா னால் சென்று விடலாமே என்று விரைந்து கொண்டிருந்தது. வியாபாரத் துறையில் சூழ்ச்சியும், மோசங்களும் செய்து முன்னுக்கு வருகிறவர்கள் எல்லாரும் இப்படித்தான் எதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/227&oldid=597716" இலிருந்து மீள்விக்கப்பட்டது