பக்கம்:பிறந்த மண்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 - பிறந்த மண்

வாரத்தில் அப்பாவிடம் சொல்லி உங்களுக்கு ஓர் அருமை யான வேலை பார்த்து விடலாம்." லில்லி முன்பு கூறிய தையே மீண்டும் வற்புறுத்திக் கூறினாள்.அழகியநம்பி மனம் உடைந்து போய்விடக் கூடாதே என்ப்தற்காகத்தான் அந்த நம்பிக்கையை மீண்டும் மீண்டும் நினைவூட்டிக் கொண்டிருந் தாள் அவள்

‘மேரி லில்லி! நீங்கள் இருவரும் என்மேல் வைத்தி ருக்கும் அளவற்ற அன்பிற்கு நான் நன்றி செலுத்திக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன். எனக்காக நீங்கள் உங்களுடைய தந்தையிடம் சொல்லி எந்த வேலையும் தேட முயற்சி செய்யக் கூடாது. இனி நான் என்ன வேலையைச் செய்யவேண்டுமென்பதை நானே தீர்மானித்துக் கொண்டு விட்டேன்.” .

என்ன செய்யப் போகிறீர்களாம்?" 'தயவு செய்து நீங்கள் இருவரும் என்னை மன்னிக்க வேண்டும். நான் இனிமேல் என்ன செய்யப் போகிறேன் என்கிற செய்தி என் மனத்தில் மட்டுமே இருக்கட்டும். அது இப்போது உங்களுக்குத் தெரிய வேண்டாம்.'

"நீங்கள் சொல்ல விரும்பாவிட்டால் நாங்கள் வற்புறுத்த வில்லை. உங்களுக்கு விருப்பம் இருக்குமானால் இதைவிட உயர்ந்த வேலையாக வசதியான வருவாய் உள்ளதாக அப்பாவிடம் சொல்லிப் பார்க்கச் சொல்லலாம் என்பதற் காகத்தான் சொன்னோம்.”

'இல்லை! அது வேண்டாம்' அவன் மதுத்தான். அப் போது அவன் குரலில் தவிர்க்க முடியாத உறுதி இருத்தது.

"அப்படியானால் நீங்கள் எங்கள் வீட்டிற்குக்கூட வர மாட்டிர்களா?'

இந்தக் கேள்வியைக் கேட்டதும் தன்னுடைய சொந்த மனத் துன்பங்களை மறந்து கலகலவென்று சிரித்துவிட்டான், அழகிய நம்பி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/230&oldid=597723" இலிருந்து மீள்விக்கப்பட்டது