பக்கம்:பிறந்த மண்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - 231

ரத்தினத்தின் விட்டில் கொண்டுபோய் விட்டால் நல்லது”. என்றான் அழகிய நம்பி.

“இப்படிச் செய்துவிட்டால் என்ன? நாம் எல்லாரும் இப்போது முதலில் நம்முடைய வீட்டிற்கே போகலாம். அங்கே போப் டிரைவரிடம் சபாரத்தினத்தின் முகவரியைச் சொல்லி அனுப்பிக் காரில் கூட்டிக்கொண்டு வரச் செய்ய லாமே?”-என்றாள் லில்லி. அவனுக்கும் அந்த யோசனை சரியென்றே தோன்றியது.

'பாவம்! சடாரத்தினத்திற்கு வேலை போயிருக்கும், அவருக்கு மட்டுமா? கடையில் வேலை பார்த்து வந்த அத்தனை ஆட்களுக்கும் சமையற்காரச் சோமு உட்பட வேலை டோயிருக்கும். நிர்வாகத்தின் மோசடிகளால் ஒரு பெரிய வியாபார நிறுவனம் கவிழ்த்துவிட்டால் எத்தனை பேர் நடுத்தெருவில் நிற்க நேரிடுகிறது!--அழகிய நம்பி சிந்தித்தான். பிரமநாயகம் கொ ை செய்கிற அளவுக்குப் பூர்ணாவின் மேல் எப்படி ஆத்திரமடைந்தார்? பூர்ணா அவரிடம் அப்படி மாட்டிக் கொள்கிற அளவுக்கு ஏமாளி யாக இருந்தாளா பிரமநாயகம் இனி என்ன ஆவார்? அவருடைய மோசடிக் குற்றங்களுக்கும் கொலைக் குற்றங் களுக்கும் என்ன தண்டனைகளை அடைவார்? கடை என்ன ஆகும்? வியாபாரம் என்ன ஆகும்'- என்பதைப் பற்றி அழகிய நம்பி அதிகம் சிந்தித்து மூளையைக் குழப்பிக் கொண்டிருக்கவில்லை. த. .ந்ததைப் பற்றி--இனி நடக்க இருப்பவற்பைப் பற்றித் இன்னுடைய சொந்தத் தீர்மானங் தளைப் பற்றி-சபாத்தினம் என்ற தன் உண்மை நண்ப ரிடம் சில மணி நேரம் அமைதியாகக் கலந்தாலோசித்துப் பேச ஆசைப்பட்டான் அவன்

4....

கார் பங்களா வாசலை அடைந்ததும் முன்புறத்தில் சாய்வு நாற்காலிகளில் உட்கார்ந்து உரையாடிக் கொண்டி ருந்த வோட்ஹவுஸும் திருமதி வோட்ஹவுஸும், சிறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/233&oldid=597730" இலிருந்து மீள்விக்கப்பட்டது