பக்கம்:பிறந்த மண்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 233

புறப்பட்டுச் சென்றுவிட்டான். பிஸ்கட்டும், தேநீரும் கொடுத்து அவனை உபசரித்தார்கள். வோட்ஹவுஸ் தம்பதி மாறிமாறி அவனுக்கு ஆறுதல் கூறினர். அவர்கள் தன்னிடம் ஆறுதலையும் அனுதாபத்தையும் கூறுவதைவிட கூறாமல் இருந்தால் தன் மனம் கலங்காமல் அமைதியாக இருக்குமென்று அப்போது அழகியநம்பிக்குத் தோன்றியது. சபாரத்தினம் வரும்நேரத்தை ஆவலுடன் எதிர்பார்த்தான் அவன் ,

25. தீர்மானம்

சடாரத்தினம் வந்துவிட்டார். சொல்லிவிட்டுப் போன படி விரைவாக கூட்டிக்கொண்டு வத்துவிட்டான் டிரைவர். வேலைபோய்விட்டதே என்ற கவலையோ வருத்தமோ அந்த மனிதரிடம் இல்லை. வழக்கம்போல் அட்சர லட்சம் பெறும் அந்தச் சிரிப்போடு, என்ன பிரயாணமெல்லாம் செளகரிய மாக இருந்ததா?”-என்று கேட்டுக்கொண்டே அவன்முன் வந்து நின்றார் சபாரத்தினம்.

"செளகரியந்தான்’-என்றான் அழகிய நம்பி. மேரி, சபா ரத்தினத்தை உட்காரச் சொல்லித் தேநீர் கொண்டு வந்து கொடுத்தாள்: அவர் அதைப்பருகியதும், நான் உங்களிடம் கொஞ்சம் தனியாகப் பேசவேண்டும். அதற்காகத்தான் இப்போது சந்திக்க விரும்பினேன்”-என்று அழகியநம்பி அவருடைய முகத்தை ஏறிட்டுப் பார்த்துக்கொண்டே சொன்னான்.

'அதற்கென்ன? பேசுவோமே!” என்று சொல்விச் சிரித் தார் சபாரத்தினம். இனிமேல் பேச என்ன இருக்கிறது? என்று சிரிப்பதுபோல் இருந்தது அவர் சிரித்த விதம்.

'மாடிக்குப் போய்ப் பேசிவிட்டு வாருங்களேன். மேரி இவர்களுக்கு மாடியறைக் கதவைத்திறந்துவிடு' என்றார் வோட்ஹவுஸ்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/235&oldid=597735" இலிருந்து மீள்விக்கப்பட்டது