பக்கம்:பிறந்த மண்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 பிறந்த மண்

'வாருங்கள் போகலாம்!” மேரி அழைத் தாள். அழகிய நம்பி சபாரத்தினத்தைக் கூட்டிக்கொண்டு மாடிக்குச் சென்றான்.

கடற்காற்று வீசும் அந்த மாடியறையின் மனோரம்மிய மான சூழ்நிலையில் ஒரு விநாடி என்ன பேசுவது யார் முதலில் பேசுவது?- என்று திகைத் துப் பேசாமல் உட்கார்ந்து கொண்டிருந்தனர். இருவரும்.

“என்ன நடந்தது? எனக்கு விவரமாகச் சொல்லுங்கள். அவளைக் கண்டாலே புயத்து சாகிற மனிதர் கொலை விெய்கிற அளவுக்கு எப்படித் துணித் இார்?’

- அழகிய நம்பி பேச்சைத் தொடங்கினான்.

"அழகியநம்பி! இதில் நீங்கள் ஆச்சரியப்படுவதற்கு என்ன இருக்கிறது! உங்களுக்கு நினைவிருக்குமே? நீங்கள் புறப்படுவதற்கு முதல்நாள் மத்தியானம் உங்கள் அறைக்குள் பேசிக்கொண்டிருக்கும்போது நான் என்ன சொன்னேன்?” "பூர்ணாவுக்கும் பிரமநாயகத்துக்கும் உள்ளுரவிரோதம்

ه-- اخ

இருக்கிறதென்று குறிப்பாகச் சொல்லியிருந்தீர்கள் '

'சொல்லியிருந்தேன் அல்லவா? அது திடீரென்று முற்றிவிட்டது. அவர்கள் இருவருக்கும் உங்கள் விஷயமாகத் தான் தகராறும் விவாதமும் ஏற்பட்டிருக்கும் போலிருக் கிறது. ஞாயிற்றுக்கிழமை கடை கிடையாதென்றாலும் பூர்ணாவை வரச்சொல்லியிருக்கிறார் பிரமநாயகம். அவள் வந்திருக்கிறாள். அலுவலக அறைக்குள் நீண்டநேரம் இருவருக்கும் பலமான விவாதமும் சப்தமும் ஏற்பட்டிருக் கின்றன. அதுவரை என்றும் பேசாத முறையில் திட்டியும், ன்வதும், இரைந்து பேசிக்கொண்டார்களாம். அதற்குக் காரணம் உங்களைப்பற்றிய பிரச்னையில் இருவருக்கும் இருந்த கருத்து வேறுபாடுதானாம். இதைச் சமையற்கார சோமுவிடம் விசாரித்து அறிந்து கொண்டேன் நான்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/236&oldid=597737" இலிருந்து மீள்விக்கப்பட்டது