பக்கம்:பிறந்த மண்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 233

"மறுநாள் திங்கட்கிழமையாகையால் கடை உண்டு. அதனால், ஞாயிற்றுக்கிழமைக்குப்பின் தொடர்ந்து நடந்த எல்லா நிகழ்ச்சிகளையும் நானும், கடையில் வழக்கமாக வேலை பார்த்துவரும் மற்ற நண்பர்களும் நன்கு அறிவோம். திங்கட்கிழமை காலையில் பத்தேகால் மணிக்குப் பூர்ணா எப்போதும்போல் வந்து அலுவலக அறைக்குள் தன் வேலை களைக் கவனித்துக் கொண்டிருந்தாள்.

'வியாபார விஷயமாக வெளியில் அலைந்துவிட்டுப் பின்னிரண்டு மணி சுமாருக்குப் பிரமநாயகம் கடைக்கு வந்தார். பூர்ணாவிடம் போய் அறைக்குள் சிறிது நேரம் கோபத்தோடு இரைந்து கொண்டிருந்தார். அவளும் பதிலுக்கு இரைந்தாள். இருவரும் அறைக்குள் போட்டுக் கொண்ட சத்தம் கடை முழுதும் கேட்ட்து.

'சத்தம் போட்டுவிட்டுக் குளித்துச் சாப்பிடுவதற்காகப் பின்கட்டுக்குப் போயிருந்தார் பிரமநாயகம். அவர் உள்ளே போய்ப் பதினைந்து, இருபது நிமிடங்கள்கூட ஆகியிருக் காது. கடை வாசலில் ஒரு பெரிய கார் வந்து நின்றது. இரண்டு மூன்று பேர் இறங்கி வந்தார்கள். பார்த்தால் ஏதோ சர்க்கார் அதிகாரிகள் போல் தோன்றினர். கடையில் ஏதாவது வாங்கிக் கொண்டுபோக வந்திருப் பார்கள் என்ற நினைப்புடன் நான் அவர்களை வரவேற் றேன்.

"நாங்கள் கடையில் சாமான்கள் வாங்க வ்ரவில்லை. விற்பனை வரி, வருமான வரி செக்கிங் இன்ஸ்பெக்டர்கள். எங்கள் உத்தியோக வேலையாகக் கணக்கு வழக்குகளைப் பரிசோதனை செய்ய வந்திருக்கிறோம்” என்று சொன் ன்ார்கள் அவர்கள். உடனே நான் அவ்ர்களைப் பூர்ணாவின் அறையில் கொண்டு போய் விட்டேன். அவர்களுடைய வரவைக் கடையின் ப்யூன் மூலம் பின்கட்டில் குளித்துக் கொண்டிருந்த பிரமநாயகத்துக்குச் சொல்லி அனுப்பினேன். என் மனதில் சந்தேகமும், பயமும் ஏற்பட்டிருந்தன. அன்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/237&oldid=597740" இலிருந்து மீள்விக்கப்பட்டது