பக்கம்:பிறந்த மண்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 237

ஆத்திரத்துக்கும், வேதனைக்கும் ஒ அளவே இல்லை. 'சாவியில்லாவிட்டால் என்ன? நீயும் , சோமுவும் சேர்ந்து உடைக்க முடியுமா? - என்றார். நாங்கள் பதில் சொல்ல வில்லை. அவரும் அதற்குமேல் அதை அதிகம் வற்புறுத்த வில்லை.

பின்பு இரவு ஏழுமணக்கு நான் கடை வேலையை முடித்துக்கொண்டு வீட்டுக்கு வந்து விட்டேன். மறுநாள் காலை வழக் கம்போல் வேலைக்குப் போனபோதும் வேறு விசேடமாக எதுவும் நடைபெற்றிருக்கவில்லை. பிரம நாயகம் முதல் நாளிரவு போல் பித்துப்பிடித்தவர் போன்ற நிலையிலேயே அறைக்குள் கிடந்தார். அவரைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. ஒன்பது மணியிலிருந்து பத்தேகால் மணிக்குள் பூர்ண்ா வந்துவிட்டாளா, என்று இருபது முப்பது தடவையாவது முன்கட்டுக்குக் கேட்டனுப்பியிருப் பார். பத்து, பன்னிரண்டு தடவை பாவது அலுவலக அறை திறந்திருக்கிறதா என்று பார்த்துக் கொண்டு வரச்சொல்லிச் சமையற்காரச்சோமுவை விரட்டியிருப்பார். காலையிலிருந்து குளிக்கவில்லை, சாப்பிடவில்லை. வெறி 'பிடித்தவர் ே ால உட்கார்ந்திருக்கிறார்-என்றான் சோமு.

'பத்தேகால் மணிக்குப் பூர்ணா வந்து கதவைத் திறந்து கொண்டு போய் அறைக்குள் உட்கார்ந்தாள். உடனே நான் பின்கட்டுக்குப் போய் அவள் வந்துவிட்டாள்; அறைக்குள் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள்'- என்று அவரிடம் சொன் னேன். வந்துவிட்டாளா?...' என்று கட்டுக்கொண்டே வேகமாக எழுந்திருந்து வந்தார். அறைக்குள் நுழைந்தார்.

"நாங்களெல்லாரும் அவரவர்கள் இடத்தில் இருந்த வாறே என்ன நடக்கப் போகிறதோ?- என்று பயத்தோடு காதைத் தீட்டிக் கொண்டு கேட்பதற்குத் தயாராக இருந் தோம். நாங்கள் எதிர்பார்த்தபடி பிரமநாயகம் உள்ளே கென்றவுடன் உள்ளே பலத்த கூப்பாடோ, விவாதமோ உண்டாகவில்லை, அமைதியாகவுே ஒரு வருக்கெ rரு %rir”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/239&oldid=597745" இலிருந்து மீள்விக்கப்பட்டது