பக்கம்:பிறந்த மண்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 பிறந்த மண்

பேசிக்கொண்டார்கள் போலிருக்கிறது. அரைமணி. நேர மானதும் சத்தம் பலத்தது. அறையே இடிந்து விழுந்து விடும்போல ஒருவருக்கொருவர் கூப்பாடு போட்டுக் கொண்டார்கள்.

திடீரென்று அந்தப் பெண் பூர்ணா குரூரமாக அலறும் ஒலி பயங்கரமாகக் கேட்டது. பிரமநாயகத்தின் குரல். கேட்கவில்லை. நானும் இன்னும் இரண்டொருவரும் அறைக் கதவுகளைத் திறந்து கொண்டு உள்ளே போய்ப் பார்த்) தோம். அப்பப்பா! என்ன கோரக்காட்சி? காகிதம் அறுப் பதற்காக மேஜைமேல் வைத்திருந்த நீளமான கத்தியை அவள் நெஞ்சில் நாலைந்து முறை குத்தி எடுத்துவிட்டார் பிரமநாயகம். வெறிபிடித்து விட்டதால் நிறுத்தாமல் கத்தியைக் குத்திக் குத்தி உருவிக்கொண்டிருந்தார். மேஜை, நாற்காலி, பைல்கள், கணக்குப் புத்தகங்கள், டைப்ரைட் டர்கள்,-எங்கும் சிவப்பு ரத்தம் பிரிட்டுச் சிதறியிருந்தது. நானும் மற்றவர்களும் அப்போது அவர் அருகே நெருங்கவே பயந்து கொண்டு வெளியே ஓடிவந்துவிட்டோம்.

- "க்ப்பாட்டையும், அலறலையும் கேட்டுக் கடை வாச லில் என்னவோ, ஏதோ என்று கூட்டம் கூடிவிட்டது. கால் மணி நேரங்கழித்துக் கைகளிலும் உடம்பின் பல பாகங்களி லும் இரத்தக்கறை படிந்த தோற்றத்தோடு தாமாகவே அறையிலிருந்து வெளியே வந்தார் பிரமநாயகம். கண்களில் கொலைவெறி அப்போதும் அடங்கவில்லை. எல்லாரும் அவரவர்கள் இடத்தில் என்ன செய்வதென்று தோன்றாமல் திகைத்துப் போய் நின்று கொண்டிருந்தோம். அவர் நேராகப் போன் இருந்த இடத்தை நோக்கிப் போனார். போனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஆள் பயந்து எழுந்து ஒதுங்கி நின்றுகொண்டான். இரத்தக்கறை படிந்த கையால் அவராகவே தாம் கொலை செய்துவிட்டதாகப் போலீஸுக்குப் போன் செய்தார். பின்பு எங்களையெல்லாம் பார்த்து நிதானமாகச் சொன்னார்-"நாளையிலிருந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/240&oldid=597747" இலிருந்து மீள்விக்கப்பட்டது