பக்கம்:பிறந்த மண்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 239

இந்தக் கடை நடக்காது. உங்களுக்கெல்லாம் இங்கே வேலை இல்லை.” -

ஒன்றும் பதில் சொல்லத் தோன்றாமல் இருந்துவிட் டோம். பின்பு கடை வாசலில் கூடியிருந்த கூட்டத்தை நோக்கி, ஏன் கூட்டம் போடுகிறீர்கள்? போய்விடுங்கள்”என்றார். போலீஸ் லாரி வந்தது. அவரைக் கைது செய் தார்கள், எங்களில் சிலரைக் கொலைக்குச் சாட்சிகளாகப் பதிவு செய்து கொண்டார்கள், கொலை செய்யப்பட்ட பூர்ணாவின் உடலை வைத்தியப் பரிசோதனைக்காக அப்புறப்படுத்தினார்கள். எங்களை யெல்லாம் வெளியேற்றி விட்டுக் கடையின் எல்லாப் பகுதிகளையும் பூட்டிச் சீல் வைத்துப் போலீஸ்காரர்களைக் காவல் வைத்தனர். பிரம நாயகத்தை லாரியில் ஏற்றிக்கொண்டு போய்விட்டனர். நடந்தது இதுதான். பிரமநாயகம் ரிமாண்டில் இருக்கிறார். அவரை நம்பி இருபதாயிரம், முப்பதாயிரம் என்று ஏராள மான தொகைகளுக்குச் சரக்குக் கொடுத் தவர்களெல்லாரும் கையைச் சுட்டுக்கொண்டு தவிக்கிறார்கள். மனிதனுக்குக் கிடைப்பதென்னவோ தாக்குத்தண்டனைக்குக் குறைவாக வேறெதுவும் இருக்காதென்று பேசிக்கொள்கிறார்கள்.”

சபாரத்தினம் சொல்லி முடித்தார். அழகிய நம்பி சிந்த னையில் மூழ்கியவனாய் அதிர்ந்துபோய் உட்கார்ந்து கொண்டிருந்தான்.

"நீங்கள் எனன செய்யப்போகிறீர்கள் இனிமேல்:

சபாரத்தினம் அவனைக் கேட்டார். அவருக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் தயங்கினான்.

"செய்வதென்ன? அதை, இந்த நிகழ்ச்சிகளெல்லாம். என்க்குத் தெரிவதற்கு முன்பே நான் தீர்மானித்து வைத்து விட்டேனே!" -

“ஊருக்குத் திரும்பிப் போகும் திட்டம்தானே அது?" 'சபாரத்தினம் சிரித்துக் கொண்டே கேட்டார்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/241&oldid=597749" இலிருந்து மீள்விக்கப்பட்டது