பக்கம்:பிறந்த மண்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீர். பார்த்தசாரதி - 243

"நான், இவ்வளவு அவசரப்பட்டுக்கொண்டு ஊர் திரும்ப வேண்டாமென்று இவருக்கு உங்களுக்கெல்லாம் முன்னாலேயே சொல்லிவிட்டேன். கேட்கமாட்டேனென் கிறார்; நாம் என்ன செய்யலாம்?"

"மிஸ்டர் சபாரத்தினம்! நீங்களே கூறுங்கள் இப்போது உடனே ஊருக்குத் திரும்பிப் போய் இவர் என்ன சாதித்து விடப் போகிறார்?

"தயவுசெய்து நீங்கள் எல்லாரும் என் ைமன்னிக்க வேண்டும். நாலைந்து நாட்களாகவே என் மனநிலை சரி யில்லை. உங்களிடம் வார்த்தைகளால் கோவைப்படுத்திக் கூறமுடியாத ஒரு பேருணர்ச்சி. என்னை நான் பிறந்தபூமிக்கு இழுக்கிறது. உடனே ஒடே டிப் போய் எனது அழகான கிராமத்து வயல்வெளிகளின் மேடும், பள்ளமுபான வரப்பு களில் கால்தேய நடக்கவேண்டும்போல் ஒரு துடிப்பு உண் டாகிறது. பதினைந்து, இருபது நாட்களுக்குள்ளாகப் பச்சைக் குழந்தையைப்போல் இப்படி இந்தப் பிரிவினை உணர்ந்து ஏங்குகிறேனே!-என்று என்னை நீங்கள் கேலி செய்தாலும் செய்யலாம். அல்லது வினோதமான எனது இந்தப் பலவீனம் உங்களுக்குப் புரியாததாகவோ, புதுமை யாகவோ இருக்கலாம். ஏதோ ஒரு தனிமை, வேதனை, ஏதோ ஒர் ஏக்கம், உங்களுக்கெல்லாம் நடுவில்-உங்களுக்கு மிகவும் வேண்டியவனாக உட்கார்ந்து கொண்டிருக்கும் இந்தச் சமயத்திலும் என் மன்த்தின் ஒரு கோடியில் கனவேக மாகத் துடித்துக்கொண்டிருக்கிறது. என்னை வற்புறுத்தா தீர்கள். எனக்காக எந்த உத்தியோகமும் நீங்கள் பார்க்க வேண்டாம். பிறந்த மண்ணில் போய் நான் பிச்சையெடுத் தாவது பிழைத்துக் கொள்வேன். என் பாதங்கள் இங்கிருந்து பெயர்ந்து செல்வதற்குத் துறுதுறுக்கின்றன, என்னைப் போகவிடுங்கள்.’’ -- -

சிறுகுழந்தை கதறுவதுபோல் அவர்க்ள் எல்லாருக்கும் முன்னால் உணர்ச்சிமயமாக மாறிக் கதறினான் அழகிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/245&oldid=597759" இலிருந்து மீள்விக்கப்பட்டது