பக்கம்:பிறந்த மண்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 - பிறந்த மண்

சமாதானப்படுத்த முயன்றான். அவன் முயற்சி புயனளிக்க வில்லை. அவன் கர்லடியில் அழுதுகொண்டே வீற்றிருந் தனர். அவர்கள். அவனுக்கு அதற்குமேல் பேசத் தோன்ற வில்ல்ை. அவர்களுக்கும் பேசத் தோன்றவில்லை. அமைதி யான நிலையில் மூன்று உள்ளங்கள் உணர்ச்சித் துடிப்பில் மூழ்கியிருந்தன. t

கடைவீதிக்குப் போயிருந்தவர்கள் ஒன்பதரை ஒன்பதே முக்கால் மணிக்குத் திரும்பி வந்தனர். சபாரத்தினமும் அழகியநம்பியும் மாடியறையில் போய்ப் படுத்துக் கொண் டனர். இருவருக்கும் படுத்தவுடன் உறக்கம் வரவில்லை யான்ாலும் ஒருவரோடொருவர் பேசிக் கொள்ளவில்லை. விளக்கை அணைத்துவிட்டுப் படுக்கையில் புரண்டுகொண் டிருந்தனர். அன்று அந்தப் பங்களாவில் எல்லாருடைய நிலையும் ஏறக்குறைய இப்படியேதான் இருந்தது. உள்ளத் தில் இடம் பெற்றுவிட்ட அன்பான நண்பனைப் பிரியும் போது ஏற்படும் வேதனையின் அமைதி அது.

காலையில் எட்டுமணிக்குக் கப்பல் புறப்படுகிறது. ஏழு மணிக்கே எல்லாரும் துறை முகத்திற்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டார்கள். காரில் போய்க்கொண்டிருந்தபோது மேரியும் லில்லியும் அழகியநம்பியின் வலக்கையில் விரலுக்கு ஒன்றாக இரண்டு மோதிரங்களைத் தங்கள் கையிலிருந்து கழற்றி அணிவித்தனர். அந்த மோதிரங்களில் எனாமல் எழுத்துகளில் முறையே மேரி, லில்லி, என்ற பெயர்கள் பொறிக்கப் பெற்றிருந்தன. அவனுடைய கையை அன்பாகப் பற்றி அந்த மோதிரத்தை அவர்கள் அணியும்போது அவற்றை மட்டும் அவன் கை தாங்கிக்கொள்ளவில்லை.சூடு நிறைந்த இரண்டு கண்ணிர்த் துளிகளையும் அவன் புறங்கை தாங்கிக் கொண்டது

'இது எங்கள் நினைவாக என்றும் உங்கள் கைவிரல் களில் இலங்கவேண்டும்”. அந்தப் பெண்களின் உருக்கமான சொற்களுக்குப் பதில் சொல்ல நாவெழாமல் தலையை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/248&oldid=597766" இலிருந்து மீள்விக்கப்பட்டது