பக்கம்:பிறந்த மண்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 - - ു:- -

களைப் போல் கடலை வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றனர் - -

“எப்போதாவது மறுபடியும் இந்த நாட்டில் வந்து வ்ேலை பார்க்கும் ஆவலோ, வாய்ப்போ ஏற்பட்டு, நீங்கள் இங்கே மீண்டும் வர நேர்ந்தால் எங்களையெல்லாம் சந்திக்கத் தவறி விடாதீர்கள்!” என்றார் வோட்ஹவுஸ்.

"வருவேன். வரலாம். ஆனால், அந்த வரவு உங்களை யெல்லாம் பார்ப்பதற்காக இருக்குமேயன்றி, வேலைக் காகவோ,பிழைப்புக்காகவோ இராதென்பதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன்-என்று உறுதியாகக் கூறினான் அழகியநம்பி * - "ஏன் அப்படி? வேலைக்காக வருவதில் ஒன்றும் தவறு இல்லையே?’-அவர் கேட்டார். . தவறோ தவறில்லையோ?-எனக்குப் பிடிக்கவில்லை, அவ்வளவுதான் நான் கூறமுடியும், பிழைப்புக்கென்றோ,' வேலைகள் உத்தியோகங்கள் பார்ப்பதற்கென்றோ என்னு டைய வளமான கிராமத்தின் எல்லையைக் கடந்து ஒர் அடி: பெயர்த்து வைக்கமாட்டேன், இனிமேல், பிரமநாயகம் என்ற போலி மனிதருக்காக ஒருமுறை, ஒரே ஒருமுறை அந்தத் தவறைச் செய்தேன். இனி மறந்தும் அப்படிச் செய்யமாட்டேன்’. அழகியநம்பி பேசும்போது அவன் க்ண்களில் அற்புதமானதோர் ஒளி மின்னியது. .

பின் என்னதான் செய்யப். போகிறீர்கள்! வாழ்க்கை நட்ப்பதற்கு ஏதாவது செய்துதானே ஆகவேண்டும்?ஒன்றும் செய்யாமல் கையைக் கட்டிக்கொண்டு கிராமத்திலே போய் உட்கார்ந்து கொண்டுவிட்டால் போதுமா?”

"எதைச் செய்தாலும், எப்போதுசெய்தாலும், எப்படிச் செய்தாலும் அதை நான் பிறந்த மண்ணின் நான்கு எல்லை களுக்குள்ளே செய்ய விரும்புகிறேன். நிழலுக்கு ஒதுங்கிக் 'கொள்ள் ஒரு வீட்டைத் தவிர வேறு எந்த ஆஸ்தியும் எனக்கு என்னுடைய கிராமத்தில் இல்லை. என் தகிப்பினர்ர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/250&oldid=597771" இலிருந்து மீள்விக்கப்பட்டது